திமுக அமைச்சர் துரைமுருகன் மணல் கொள்ளையில் 60 ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளார், ஆதாரம் விரைவில் வெளியிடப்படும் – திமுக நிர்வாகி பகீர் தகவல் !

திமுக அமைச்சர் துரைமுருகன் மணல் கொள்ளையில் 60 ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளார், ஆதாரம் விரைவில் வெளியிடப்படும் – திமுக நிர்வாகி பகீர் தகவல் !

Share it if you like it

திமுகவில் கொள்கை பரப்பு துணைச் செயலாளராகவும், தலைமைக் கழக பேச்சாளராகவும் இருந்து வருபவர் குடியாத்தம் குமரன். மேடைகளில் வேலூர் வட்டார வழக்கில் எதிர்க்கட்சிகளை கடுமையான விமர்சனம் செய்யும் குடியாத்தம் குமரன் சில நேரங்களில் சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு துரைமுருகனை குடியாத்தம் குமரன் விமர்சிப்பது போன்ற ஒரு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார். பிறகு மீண்டும் திமுகவில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.

இந்த நிலையில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், “கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் குடியாத்தம் குமரன், கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிக நீக்கம் செய்யப்படுகிறார்” என்று தெரிவித்துள்ளார், “

அதற்கு பதிலடி தரும் விதமாக காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார் குடியாத்தம் குமரன். அதில்,தலைவர் ஸ்டாலினும், உதயநிதியும் கட்சிக்காக இவ்வளவு கஷ்டப்பட்டு வரும் நிலையில், ஆனால் அமைச்சர் துரைமுருகன் குடும்பம் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. மணல் கொள்ளையில் அமைச்சர் துரைமுருகன் 60,000 கோடி சம்பாதித்துள்ளார். மிக விரைவில் அனைத்து ஆதாரங்களையும் வெளியிடுவேன். என்னை செருப்பால் அடித்து விரட்டினாலும் திமுகவில்தான் இருப்பேன்” என்று கூறியுள்ளார். இந்த விவகாரம் வேலூர் மாவட்ட அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த காணொளியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

https://x.com/ArulkumarBjp/status/1727303741311971776?s=20


Share it if you like it