செந்தில்பாலாஜியின் தில்லுமுல்லு… அம்பலப்படுத்தும் வழக்கறிஞர்!

செந்தில்பாலாஜியின் தில்லுமுல்லு… அம்பலப்படுத்தும் வழக்கறிஞர்!

Share it if you like it

போக்குவரத்துத்துறையில் செந்தில்பாலாஜி எப்படி எப்படியெல்லாம் தில்லுமுல்லு செய்தார் என்பது குறித்து வழக்கறிஞரும், லஞ்ச ஒழிப்பு இயக்கத்தின் உறுப்பினருமான சுப்பிரமணியன் அம்பலப்படுத்தி இருக்கிறார்.

அ.தி.மு.க. ஆட்சியில் 2011 முதல் 2015 வரை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, வேலைவாங்கித் தருவதாகக் கூறி, ஏராளமானோரிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாக வழக்கு நடந்து வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக கடந்த மாதம் 26-ம் தேதி செந்தில்பாலாஜி தம்பி வீடு மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தொடர்ந்து, கடந்த 13-ம் தேதி செந்தில்பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதையடுத்து, செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். நெஞ்சு வலிப்பதாக செந்தில்பாலாஜி கூறவே, அவரை மருத்துவமனையில் அட்மிட் செய்தனர். அப்போது, செந்தில்பாலாஜியை நேரில் சந்தித்து விசாரணை நடத்திய நீதிபதி, அவரை 28-ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, சிறைக் கைதியாக போலீஸ் காவலில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் செந்தில்பாலாஜி. அவரது அமைச்சர் பதவியும், அமைச்சர்கள் தங்கம் தென்னரசுவுக்கும், முத்துச்சாமிக்கும் பிரித்து கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், 2014 – 15-ம் ஆண்டு போக்குவரத்துத் துறை பணி நியமனத்தில் செந்தில்பாலாஜி எப்படியெல்லாம் மோசடி செய்தார் என்பதை அம்பலப்படுத்தி இருக்கிறார் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞரும், லஞ்ச ஒழிப்பு இயக்கத்தின் உறுப்பினருமான சுப்பிரமணியன். இவர் சொல்லும் ஒவ்வொரு விஷயமும் பகீர் ரகம். நேரடி இன்டர்வியூவில் 25 மதிப்பெண் பெற்றவருக்கு வெறும் 3 மதிப்பெண் வழங்கி ஃபெயிலாக்கிய தில்லுமுல்லுகளை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறார். செந்தில்பாலாஜியின் தில்லுமுல்லுகளை தெரிந்துகொள்ள கீழே உள்ளி வீடியோவை கிளிக் செய்யவும்…


Share it if you like it