செந்தில்பாலாஜியின் பேன்ட்டில் யூரின் கறை இருந்தது நன்றாகவே தெரிகிறது என்று பொதுக்கூட்ட மேடையில் பேசி அசிங்கப்படுத்தி இருக்கிறார் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு.
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி. இவர், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இது தொடர்பாக கடந்த மாதம் 26-ம் தேதி வருவாய்த்துறையினர் அவரது தம்பி அசோக்குமார் மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தினர். அப்போது, செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்களும், தி.மு.க.வினரும் அதிகாரிகளை தாக்கியதோடு, அவர்களது கார்களையும் சேதப்படுத்தினர்.
இதைத் தொடர்ந்து கடந்த 13-ம் தேதி செந்தில்பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர், அவரை கைது செய்தனர். ஆனால், தனக்கு நெஞ்சுவலிப்பதாக அவர் கூறவே, அவரை ஓமாந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் சேர்த்தனர். செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் காரில் ஏற்றி வந்து ஆஸ்பத்திரியில் இறக்கியபோது, அவரது பேன்ட் ஈரமாக இருந்தது. எனவே, அமலாக்கத்துறை விசாரணையில் செந்தில்பாலாஜி உச்சா போய் விட்டதாக நெட்டிசன்களும், பா.ஜ.க.வினரும் கிண்டல் செய்து வந்தனர்.
அதேசமயம், நெஞ்சுவலி ஏற்பட்டபோது அதிகாரிகள் குடிக்கக் கொடுத்த தண்ணீர் செந்தில்பாலாஜியின் பேன்ட்டில் சிந்தி இருக்கலாம் என்று மற்றொரு தகவலும் கூறப்பட்டது. எனவே, இந்த விஷயம் அப்படியே நீர்த்துப்போனது. ஆனால், செந்தில்பாலாஜி கைதை கண்டித்து தி.மு.க. சார்பில் கோவையில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எம்.பி. டி.ஆர்.பாலு, “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செந்தில்பாலாஜியை பார்த்துவிட்டு திரும்பிய அமைச்சர் சேகர்பாபு, அவரது காதின் அருகில் வீங்கி இருப்பதாகக் கூறினார். அதேபோல, மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் பார்த்துவிட்டு வந்து காயம் இருப்பதாகக் கூறினார்.
எல்லாவற்றுக்கும் மேலாக, செந்தில்பாலாஜியின் பேன்ட்டை நாம் உற்று கவனித்துப் பார்த்தால், அவரது பேன்ட்டில் யூரின் கறை படிந்திருப்பது நன்றாகவே தெரியும். அப்படியானால், அமலாக்கத்துறை விசாரணையின்போது செந்தில்பாலாஜி எந்தளவுக்கு டார்ச்சர் செய்யப்பட்டிருப்பார் என்பது தெளிவாகிறது” என்று கூறியிருக்கிறார். இதையடுத்து, செந்தில்பாலாஜி யூரின் போனது உண்மைதானா என்று நெட்டிசன்கள் கேலி, கிண்டல் செய்து வருகின்றனர். மேலும், பொதுமேடையில் டி.ஆர்.பாலு, செந்தில்பாலாஜியை இப்படி அசிங்கப்படுத்தி இருக்க வேண்டாம் என்றும் கிண்டல் செய்து வருகின்றனர்.