சர்ச்சைக்குள்ளான அமைச்சர் எ.வ.வேலு கல்வித்தகுதி; 2006-ல் 5-ம் வகுப்பு… 2004-ல் எம்.ஏ. பட்டம்: டேய் எப்புட்றா?!

சர்ச்சைக்குள்ளான அமைச்சர் எ.வ.வேலு கல்வித்தகுதி; 2006-ல் 5-ம் வகுப்பு… 2004-ல் எம்.ஏ. பட்டம்: டேய் எப்புட்றா?!

Share it if you like it

அமைச்சர் எ.வ.வேலுவின் கல்வித்தகுதி குறித்த சர்ச்சைதான் தற்போது தமிழக அரசியலில் லேட்டஸ்ட் ஹாட் டாபிக்காக இருக்கிறது.

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர் தி.மு.க.வைச் சேர்ந்த எ.வ.வேலு. இவர், ஏற்கெனவே அ.தி.மு.க.வில் இருந்தபோது, உணவுத்துறை அமைச்சராக இருந்தார். இவரது கல்வித்தகுதிதான் தற்போது கடும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அதாவது, எ.வ.வேலு அ.தி.மு.க.வில் இருந்தபோது, 2006-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டபோது, அவரது வெற்றிச் சான்றிதழில் 5-ம் வகுப்பு பாஸ் என்று இருக்கிறது. ஆனால், 2021-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றபோது, அவரது வெற்றிச் சான்றிதழில் எம்.ஏ. வரலாறு என்றும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றதுபோலவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதில், ஹைலைட் என்னவென்றால், அந்த எம்.ஏ. பட்டத்தை 2004-ம் ஆண்டே வாங்கி இருப்பதாக குறிப்பிடப்பட்டிருப்பதுதான். அதாவது, 2004-ம் ஆண்டு எம்.ஏ. பட்டம் பெற்றிருந்தால், 2006 தேர்தலில் ஏன் 5-ம் வகுப்பு பாஸ் என்று குறிப்பிட்டிருக்கிறார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. மேலும், இதை வைத்து எ.வ.வேலுவை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். 2006 தேர்தலில் 5-ம் வகுப்பு மட்டுமே படித்திருந்த ஒருவர், எப்படி 2004-ம் ஆண்டு எம்.ஏ. பட்டம் பெற்றார். டேய் எப்புட்றா என்று நக்கலாக கேள்வி எழுப்பி வருகிறார்கள். இது தற்போது சர்ச்சையாக மட்டுமில்லாமல் பெரும் விவாதத்தையும் கிளப்பி இருக்கிறது.


Share it if you like it