திமுக அமைச்சர்களுக்கு அடிப்படை அறிவு ஏதுமில்லை – உயர் நீதிமன்றம் காட்டம் !

திமுக அமைச்சர்களுக்கு அடிப்படை அறிவு ஏதுமில்லை – உயர் நீதிமன்றம் காட்டம் !

Share it if you like it

திமுக அமைச்சர்கள் சனாதனம் பற்றி பேசிய கருத்துக்கள் பிரிவினைவாதத்தை தூண்டக்கூடியதாக உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது.

கடந்த ஆண்டு சனாதன தர்மம் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்த தமிழக திமுகவின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நீலகிரி எம்பி ஆ.ராசா ஆகியோரை சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது. அவர்களின் பேச்சுக்கள் வக்கிரமாகவும், பிரிவினையை தூண்டக்கூடியதாகவும், இந்திய அரசியல் சாசனத்திற்கு முற்றிலும் எதிரானது. மேலும் இத்தகைய கருத்துக்களால் சமூகத்தில் ஏற்படும் விளைவுகளின் எந்த யோசனையுமின்றி தவறான தகவலாகவும் உள்ளது.

அரசியல் சாசனத்திற்கு எதிராக உள்ளதால் இவர்களை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைக்கும் படி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அனுபவமுள்ள தலைவர்களாக இருக்கும் இவர்கள் இக்கருத்துக்கள் மூலமாக அவர்கள் எந்த ஒரு குற்றச்செயல்களில் ஈடுபடவில்லை என்று அம்மனுவை த‌ள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஹெச்ஐவி, எயிட்ஸ், தொழுநோய், மலேரியா மற்றும் கோரானா போன்ற கொடிய நோயை சனாதன தர்மத்தோடு ஒப்பிட்டு பேசிய இந்த திமுக தலைவர்களுக்கு சனாதனம் பற்றிய எந்த புரிதலோ, அதில் பொதிந்துள்ள மெய்ஞான கருத்துக்கள் பற்றிய அடிப்படை அறிவோ ஏதுமில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது என்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த் அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

திரு. சுந்தர்


Share it if you like it