பட்டேலும், கருணாநிதியும் சமமாம்: தி.மு.க. எம்.எல்.ஏ.வை வாழ்த்திய நெட்டிசன்கள்!

பட்டேலும், கருணாநிதியும் சமமாம்: தி.மு.க. எம்.எல்.ஏ.வை வாழ்த்திய நெட்டிசன்கள்!

Share it if you like it

இரும்பு மனிதர் பட்டேலுடன் முன்னாள் தி.மு.க. தலைவர் கருணாநிதியை ஒப்பிட்டு கருத்து தெரிவித்த அக்கட்சியின் எம்.எல்.ஏ.வை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

தி.மு.க. ஆட்சியில் மக்களின் வரிப்பணம் பல வகையிலும் வீணடிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ. 2,00, 000-க்கும் மேல் கடன் உள்ளது என தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கடந்த ஆண்டு வெள்ளையறிக்கை வெளியிட்டு இருந்தார். தமிழகத்தின் நிலைமை இவ்வாறு இருக்க, 2,500 கோடியில் சென்னையில் பூங்கா. 100 கோடியில் ஈ.வெ.ரா-விற்கு சிலை, 39 கோடியில் கலைஞருக்கு நினைவிடம் அமைக்கப்படும் என தி.மு.க. அரசு தெரிவித்து இருந்தது. அதனை தொடர்ந்து, ரூ. 80 கோடியில் மெரினாவில் பேனா சிலை அமைக்கப்படும் என விடியல் அரசு அறிவித்துள்ளது.

தமிழகமே, கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் போது, பேனா சிலை அமைப்பது அவசியமா? என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் கேள்வி எழுப்பி இருந்தனர். இதனை தொடர்ந்து, இச்சம்பவம், பொதுமக்களிடையே தற்போது பேசுப்பொருளாக மாறியுள்ளது.

அந்த வகையில், பா.ஜ.க. மூத்த தலைவரும், அக்கட்சியின் ஐடி விங் தலைவருமான நிர்மல் குமார் தனது ட்விட்டர் பதிவில், எழுதாத பேனாவிற்கு ரூ.80 கோடியா? என கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு, தி.மு.க.வின் மைலாப்பூர் எம்.எல்.ஏ.வான வேலு, பேசாத பட்டேல் சிலைக்கு ஏன் அவ்வளவு கோடி? என கேள்வி எழுப்பியுள்ளார்.

துண்டுபட்டு கிடந்த இந்திய ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்தவர். சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமர். இந்தியாவை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்த பெருமைக்கு உரியவர் பட்டேல்.

குடும்பத்திற்கு சொத்து சேர்த்தவர், மக்களின் வரிப்பணத்தை வாரி சுருட்டியவர், புனிதமான அரசியலை கெடுத்தவர் கருணாநிதி. பட்டேலும், கருணாநிதியும் சமமா? என தி.மு.க. எம்.எல்.ஏ.வையும், செய்தி வெளியிட்ட சன் நியூஸையும் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.


Share it if you like it