பொய்ச் செய்தி பரப்பி அசிங்கப்பட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.!

பொய்ச் செய்தி பரப்பி அசிங்கப்பட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.!

Share it if you like it

தி.மு.க. எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா, பா.ஜ.க.வைப் பற்றி பொய்ச் செய்தி வெளியிட்டு அசிங்கப்பட்டிருக்கிறார்.

பாரத பிரதமராக நரேந்திமோடி பதவியேற்றதிலிருந்தே, பா.ஜ.க.வைப் பற்றியும், பா.ஜ.க. தலைவர்களை பற்றியும், ஹிந்து மதத்தைப் பற்றியும் பொய்ச் செய்திகளை பரப்புவது தி.மு.க.வினரின் வாடிக்கையாக இருந்து வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, இவ்வாறு பொய்ச்செய்தி பரப்புவதும், அவதூறு கிளப்புவதும் அதிகரித்திருக்கிறது. உதாரணமாக, ஜி.எஸ்.டி. வரி தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லாததை எல்லாம் சொன்னதுபோல சித்தரித்து பொய்ச்செய்தி பரப்பினார்கள். அதேபோல, ஆங்கிலத்துக்கு மாற்றாக ஹிந்தி மொழியை கற்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொன்னதை, ஹிந்தியை ஆட்சி மொழியாக்க முயற்சிக்கிறார் என்று அவதூறு கிளப்பினார்கள். இப்படி தி.மு.க.வினரின் பொய்ச் செய்திகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்த நிலையில்தான், புதிதாக ஒரு பொய்ச் செய்தியை பரப்பி அசிங்கப்பட்டு, அப்பதிவையே நீக்கி இருக்கிறார் தி.மு.க. எம்.எல்.ஏ.வும், அக்கட்சியின் ஐ.டி. செயலாளருமான டி.ஆர்.பி.ராஜா. அதாவது, பிரான்ஸ் நாட்டிடமிருந்து ரஃபேல் போர் விமானங்களை இந்தியா வாங்கியது. இதன் முதல் விமானம் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்படும் விழாவின்போது, ரஃபேல் விமானத்தில் கையெழுத்திட்டார் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங். இந்த போட்டோவை போட்டோ ஷாப் மூலம், இந்திய – சீன எல்லையில் இந்திய பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் தடுப்பு வேலிக் கம்பிகளில் பச்சைமிளகாய், எலுமிச்சம் பழம் ஆகியவற்றை ராஜ்நாத் சிங் கட்டுவது போல எடிட் செய்து, ‘கட்றோம் தூக்குறோம் அதானா?’ என்று கிண்டல் செய்யும் விதமாக பதிவிட்டிருந்தார் டி.ஆர்.பி.ராஜா.

ஆனால், இது போட்டோ ஷாப் செய்யப்பட்ட படம் என்பதை ஆதாரத்துடன் எடுத்துக் காட்டினார்கள் பா.ஜ.க. தரப்பினர். இதனால், தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜாவின் பித்தலாட்டம் அம்பலமாகியது. இதைத் தொடர்ந்து, பா.ஜ.க.வினரும், ஹிந்து அமைப்பினரும், நெட்டிசன்களும் டி.ஆர்.பி.ராஜாவை காலாய்த்து எடுத்தனர். இதனால், பொதுவெளியில் அசிங்கப்பட்ட ராஜா, அவசர அவசரமாக தான் போட்ட பதிவை டெலிட் செய்து விட்டு எஸ்கேப்பானார். ஆனாலும், நெட்டிசன்கள் விடுவதாக இல்லை. பொய்ச் செய்தி பரப்பிய ராஜாவை, தற்போது வரை வச்சு செய்து வருகிறார்கள். ராஜா, இதேபோல ஏற்கெனவே மிகவும் வாய்த்துடுக்காக அடிப்போம்… உதைப்போம்… மிதிப்போம் என்றெல்லாம் பதிவு போட்டுவிட்டு, நெட்டிசன்கள் வறுத்தெடுத்ததும் அந்தப் பதிவை டெலிட் செய்து விட்டு ஓடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

Share it if you like it