லைசென்ஸ் இல்லாமல் பஸ் ஓட்டிய தி.மு.க. எம்.எல்.ஏ.!

லைசென்ஸ் இல்லாமல் பஸ் ஓட்டிய தி.மு.க. எம்.எல்.ஏ.!

Share it if you like it

சங்கரன்கோவில் தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜா, லைசென்ஸ் இல்லாமல் பஸ் ஓட்டிய விவகாரம் கடும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு ஒன் டூ ஒன் இடைநில்லா அரசுப் பேருந்து புதிய வழித்தட துவக்க விழா நடந்தது. புதிய வழித்தடத்தை சங்கரன்கோவில் தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜா கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது, யாரும் எதிர்பாராத வகையில், டிரைவர் சீட்டில் அமர்ந்து பேருந்தை ஸ்டார்ட் செய்த எம்.எல்.ஏ., ராஜா, கழுகுமலை சாலையில் இருந்து சங்கரன்கோவில் புதிய பேருந்து நிலையம் வரை பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றார்.

இச்சம்பவம்தான் கடும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. பொதுவாக, 4 சக்கர வாகனங்களை இயக்க லைசென்ஸ் வேண்டும். அதேபோல, கனரக வாகனங்களை இயக்குவதற்கு தனியாக லைசென்ஸ் வேண்டும். இதிலும் குறிப்பாக, சரக்கு மற்றும் பயணிகளை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களை இயக்குவதற்கு பேட்ஜ் தேவைப்படும். ஆனால், தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜாவிடம் கனரக வாகனங்களை இயக்குவதற்கான லைசென்ஸும் இல்லை. அதேபோல, பேட்ஜ்ஜும் இல்லை என்கிறார்கள்.

அப்படி இருக்க, எப்படி எம்.எல்.ஏ. பஸ்ஸை இயக்கலாம் என்கிற விமர்சனம் கிளம்பி கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, தி.மு.க. எம்.எல்.ஏ. மீது போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகிறார்கள்.


Share it if you like it