ஆ.ராசாவை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாகவும், அவர் மீது குற்றவியில் நடவடிக்கை எடுக்கும்படி வழக்குப் பதிவு செய்யப் போவதாகவும் பண்டார குல நலச் சங்கத்தினர் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
சமீபத்தில் நடந்த ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி தொகுயின் எம்.பி.யுமான ஆ.ராசா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பண்டார பரதேசி என்று கூறியிருந்தார். இது பண்டார சமுதாய மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பண்டார சமுதாயத்தினரை எப்படி பரதேசி நாய்கள் என்று சொல்லலாம் என்று அவேசமடைந்த அச்சமூத்தினர், திருப்பூர் கலெக்டரை சந்தித்து புகார் மனு கொடுத்திருக்கிறார்கள்.
அந்த மனுவில், பண்டார சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் வகையில், பண்டார பரதேசி நாய்கள் என்று ஆ.ராசா பேசியிருக்கிறார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஆகவே, ஆ.ராசா மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். பின்னர், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பண்டார குல நலச் சங்கத்தினர், எங்கள் சமூகத்தை மிகவும் இழிவாக பேசிய ஆ.ராசாவை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப் போகிறோம். மேலும், எங்களது சமூகத்தை இழிவாக பேசியதற்கு அவர் மன்னிப்புக் கேட்ட வேண்டும். இல்லாவிட்டார், அவர் மீது கோர்ட்டில் வழக்குத் தொடர்வோம் என்று கூறினார்கள்.
ஆக, ஆ.ராசாவுக்கு காத்திருக்கு ஆப்பு!