தி.மு.க எம்.பி.யின் பொய் குற்றச்சாட்டிற்கு, பாண்டே பதிலடி கொடுப்பது போன்ற காணொளி ஒன்று தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தி.மு.க மூத்த தலைவரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமாக இருப்பவர் கனிமொழி. இவர், பா.ஜ.க.வின் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் பொய்யாகவே இருக்கும். தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக முதல்வரை காட்டிலும் இவர் அளந்து விடும் பொய்களுக்கு ஒரு அளவே இல்லை என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. வாழும் பெண் சீமானாக வலம் வருபவர் கனிமொழி என்பது பலரின் ஒருமித்த கருத்தாக இன்று வரை இருந்து வருகிறது.
கடந்த அ.தி.முக ஆட்சியில் பெண் விதவைகள் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகமாக இருப்பதாக சொன்னீர்களே? இப்பொழுது, குறைந்து விட்டார்களா! என டெல்லியை சேர்ந்த வின்.டி.வி நிருபர் கனிமொழியிடம் கேள்வி ஒன்றினை முன்வைக்க அதற்கு பதில் தெரியாமல் கனிமொழி திணறிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருந்தது.
இதனிடையே, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோருடன் இணைந்து தூத்துக்குடி எம்.பி. கனிமொழி பத்திரிகையாளர்களை சந்தித்து இருக்கிறார். அப்பொழுது, நிருபர் எழுப்பிய கேள்விக்கு முறையாக பதில் அளிக்காமல் மோடி தருவதாக சொன்ன 15 லட்சம் ரூபாய் பணத்திற்காக நாங்கள் காத்து கொண்டு இருக்கிறோம் என்று வழக்கமான அதே தோசையை மீண்டும் திருப்பி போட்டு இருக்கிறார்.
அந்த வகையில், கடந்த 2014 – ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் எந்த ஒரு இடத்திலும் ஒவ்வொரு இந்தியரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் பணத்தை நான் போடுவேன் என மோடி கூறவில்லை என பிரபல ஊடக நெறியாளர் பாண்டே அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார். மீண்டும் மீண்டும் பொய் பேசி வரும் அரசியல்வாதிகளுக்கு இவரது பதில் சம்மட்டி அடி கொடுப்பது போல அமைந்து இருக்கிறது. இது, தி.மு.க எம்.பி. கனிமொழிக்கும் சேர்த்தே என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விவரங்களுக்கு அதுகுறித்தான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.