உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பண்டாரம், பரதேசி என்று எம்.பி. ஆ.ராசா திமிராகப் பேசியிருக்கும் வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
வரம்பு மீறியும், வாய்க்கொழுப்பாகவும் பேசுவது தி.மு.க.வினருக்கு வாடிக்கையாகப் போய் விட்டது. கவர்னர் ஆர்.என்.ரவியை, தி.மு.க.வைச் சேர்ந்த ரெட் லைட் புகழ் ஆர்.எஸ்.பாரதி, 2ஜி புகழ் ஆ.ராசா, மண் திருட்டு புகழ் பொன்முடி உள்ளிட்ட பலரும் மிகவும் இழிவாகவும், கொலை மிரட்டல் விடுத்தும் பேசியது அனைவரும் அறிந்ததே. அதேபோல, பாரத பிரதமர் மோடியை ஆ.ராசா கடுமையாக விமர்சித்து வருகிறார். அதானி விவகாரத்தில் பிரதமர் மோடிக்கும் பங்கு இருக்கிறது என்று அவர் பேசிய விவகாரம், கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஆ.ராசா மீது வழக்குத் தொடுக்க பா.ஜ.க.வினர் தயாராகி வருகின்றனர்.
இந்த சூழலில்தான், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அவமதிக்கும் வகையில், அவர் ஒரு பண்டாரம், பரதேசி என்று பேசியிருக்கிறார். அதாவது, தமிழக முதல்வர் ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக பொதுக்கூட்டங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த கூட்டத்தில் ஆ.ராசா கலந்துகொண்டு பேசினார். அப்போது, ஒரு பண்டாரம் பரதேசியை முதல்வராக வைத்துக் கொண்டு உத்தரப் பிரதேசத்தில் ராமர் கோயில் கட்டுகிறீர்கள். மத உணர்வை தூண்டுகிறீர்கள் என்று பேசி இருக்கிறார்.
இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, ஆ.ராசா மீது அவதூறு வழக்குத் தொடர, பா.ஜ.க. முடிவு செய்திருக்கிறது. ஏற்கெனவே, மோடி சமூகத்தை அவதூறாகப் பேசிய விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், அவரது எம்.பி. பதவியும் பறிபோனது. ஆகவே, ஆ.ராசாவுக்கும் 2 ஆண்டு சிறை தண்டனை கிடைப்பது உறுதி என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.