பென்னாகரம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் இறந்தவர்களின் சடலங்களை சாலையின் ஓரமாக எரியூட்டிய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தி.மு.க.வை சேர்ந்தவரும் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் செந்தில். இவர், பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் மற்றும் பா.ஜ.க.வை விமர்சனம் செய்வதை தனது கடமையாக கொண்டவர். காலையில் தொடங்கி மாலை வரை மாற்று கட்சியை சேர்ந்த தலைவர்களை ட்விட்டரில் வசைப்பாடி பொழுது போக்கி வருகிறார் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது உண்டு. சில நேரங்களில், இவரது விமர்சனத்திற்கு தி.மு.க.வை சேர்ந்த முக்கிய புள்ளிகளும் சிக்குவது உண்டு. அந்த வகையில், தயாநிதி மாறனுக்கும் இவருக்கும் எப்போதும் டிஷ்யூம் டிஷ்யூம் தான்.
இதனை தொடர்ந்து, “நீயும் சண்டைக்கு வா” என பா.ஜ.க.வை வம்புக்கு இழுப்பது. அதன் பிறகு, நாராயணன் திருப்பதி போன்ற மூத்த தலைவர்களிடம் ” நோஸ் கட் ” வாங்கி கொண்டு கப்சிப் என்று அமைதி காப்பது இவரது வழக்கம். இப்படிப்பட்ட சூழலில் தான், தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே சுடுகாட்டுப் பகுதியில் குளம்போல தண்ணீர் தேங்கி நிற்பதால், இறந்தவர்களின் சடலங்களை கிராம மக்கள் பொது வழித்தடங்களிலேயே எரியூட்டுகிறார்கள். இது அந்த பகுதியை கடந்து செல்லும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது என ஜூனியர் விகடன் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் என பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு தமது தொகுதியில் என்ன? நடக்கிறது என்பதில் எம்.பி. செந்தில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.