பூமிபூஜையை எட்டி உதைத்த தர்மபுரி எம்.பி.?!

பூமிபூஜையை எட்டி உதைத்த தர்மபுரி எம்.பி.?!

Share it if you like it

பூமிபூஜையை இழிவுபடுத்தியதாக தி.மு.க. எம்.பி.க்கு தமிழகம் முழுவதும் இருந்து கடும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் குவிந்து வருகிறது.

ஜாதி, மதம், இனம், மொழி, கடந்து விருப்பு வெறுப்பின்றி வாக்களித்த மக்களுக்கு சேவை செய்வதே ஒவ்வொரு எம்.எம்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் கடமையாக இருக்க முடியும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால், தி.மு.க.வைச் சேர்ந்த தமர்மபுரி எம்.பி. செந்தில்குமார் தொடர்ந்து ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் நடந்து கொண்டு வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தர்மபுரியில் ஒரு ஏரியை சீரமைப்பதற்காக விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த விழாவுக்கு தர்மபுரி எம்.பி. என்கிற முறையில் தி.மு.க.வைச் சேர்ந்த எம்.பி. செந்தில்குமாரை அழைத்திருக்கிறார்கள். அவரும் வந்தார். அப்போது, வழக்கமாக அரசு விழாக்களில் செய்யப்படுவதுபோல, அந்த விழாவிலும் சடங்கு சம்பிரதாயங்கள் செய்யப்பட்டன. ஆனால் செந்தில்குமாரோ, வந்தோமா விழாவை சிறப்பித்தோமா என்றில்லாமல், பொங்கி எழுந்து விட்டார். எப்படி ஹிந்து மதப்படி மட்டும் பூஜை செய்யலாம்? கிறிஸ்தவ பாதிரியாரை கூப்பிடுங்கள். இஸ்லாமிய இமாமை கூப்பிடுங்கள் என்று கத்திய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்ந்து, விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு வாழ்த்துத் தெரிவித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவை கடுமையாக விமர்சனம் செய்தார் தி.மு.க. எம்.பி. செந்தில்குமார். இந்த நிலையில், தற்போது பூமிபூஜையை அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் நூலகம் கட்டுவதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. வழக்கம்போல தொகுதி எம்.பி. என்கிற முறையில் இந்நிகழ்ச்சிக்கு தி.மு.க. எம்.பி. செந்தில்குமாரையும் அழைத்திருந்தனர். அவரும், நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, பூமிபூஜைக்காக மஞ்சள், குங்குமம் வைத்து அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கற்களை, செந்தில்குமார் காலால் எட்டி உதைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், நிகழ்ச்சி முடிந்து காரில் ஏறியவர், ஒருமுறை சொன்னால் உங்களுக்கெல்லாம் புரியாதா? ஒவ்வொரு முறையும் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா? இனி நான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் இதுபோல சடங்கு சம்பிரதாயங்கள் செய்தால் அவ்வளவுதான் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை எச்சரித்து விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் செயலுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

/https://m.facebook.com/watch/?v=781412383166229&paipv=0&eav=AfbYo3ODGi6dLsaRNUa6ssthBhdudNz5QKDORjHDdkbeN1xwiByslzXlwKgVmxdyI-A&_rdr


Share it if you like it