உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி வழக்கம் போல உளறி கொட்டி இருக்கும் காணொளி பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழக உயர் கல்வித்துறை அமைச்சாரக இருப்பவர் பொன்முடி. இவர், பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது ஏதாவது உளறி கொட்டுவதையே வாடிக்கையாக கொண்டவர். அந்த வகையில், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் இவர் பேசியதாவது; முன்பு எல்லாம் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், இரண்டாம் ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனில் அவர், மூன்றாம் ஆண்டு படிக்க முடியாது. அதேபோல, நான்காம் ஆண்டும் அவரால் படிக்க முடியாது.
இதனை, எல்லாம் கருத்தில் கொண்டு, தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் இரண்டு, மூன்று மற்றும் நான்காம் ஆண்டு செல்லும் வகையில் நாங்கள் பரிசீலனை செய்து வருகிறோம். இதுதவிர, அப்பப்போ மாணவர்கள் இடையில் தேர்வு எழுதிக் கொள்ளலாம். இது எல்லாம், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு செய்து வருகிறோம் என மாண்புமிகு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறி இருந்தார்.
இதனை தொடர்ந்து, சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாதவது; கேந்திர வித்தியாலயா, நவோதயா மற்றும் சைனிக் பள்ளிகளில் எல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகள். இந்த, பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள். தமிழ் படிக்க வேண்டும் என்ற விதியை, மத்திய அமைச்சர் எல். முருகன் ஏற்படுத்தி, கொடுக்க வேண்டும். என, நான் அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என பத்திரிகையாளர் சந்திப்பில் அமைச்சர் தெரிவித்து இருக்கிறார். இதில், கொடுமை என்னவென்றால், மேற்கூறிய பள்ளிகளில் 6-ம் வகுப்பில் இருந்து தான் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பது கூட தெரியாமல் அமைச்சர் பொன்முடி உளறிக் கொட்டி இருந்தார்.
இப்படிப்பட்ட சூழலில், தமிழகத்திற்கு அதிகமான போதை மருந்து பொருட்கள் வருவதற்கு விஜயவாடாவில் உள்ள துறைமுகம் தான் காரணம் என அமைச்சர் பொன்முடி குற்றம் சுமத்தி இருக்கிறார். விஜயவாடாவில் கடலா? எங்களுக்கு தெரியாமல் அது எங்கே? இருக்கிறது. தி.மு.க. அமைச்சர் எங்களுக்கும் காட்ட வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
“போதைப்பொருள் புழக்கம் பற்றி பேசிய அமைச்சர் பொன்முடி, மது ஆலை நடத்தி வரும் ஜெகத்ரட்சகன், டி.ஆர்.பாலு உடன் அமர்ந்து கொண்டு பேட்டி கொடுத்து இருந்தால் செய்தியாளர்கள் சந்திப்பு இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும் என தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தனது பங்கிற்கு தி.மு.க.வை பங்கம் செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.