ரூ.1,000 விண்ணப்பம்: உ.பிஸ்கள் ‘அல்வா!’

ரூ.1,000 விண்ணப்பம்: உ.பிஸ்கள் ‘அல்வா!’

Share it if you like it

குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் வழங்குவதாகக் கூறி, புதிதாக விண்ணப்படிவம் ஒன்றை அச்சடித்து மக்களுக்கு அல்வா கொடுத்து வருகின்றனர் தி.மு.க. உ.பி.ஸ்கள்!

கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும். சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தலா 100 ரூபாய் வீதம் மானியம் வழங்கப்படும். பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசினர் தி.மு.க. தலைவர்கள். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு, அந்த வாக்குறுதிகள் அனைத்தும் கடலில் கரைத்த பெருங்காயமாகி விட்டது. இதனால், தி.மு.க. அரசு மீது மக்கள் கடும் அதிருப்தி மற்றும் ஆத்திரத்தில் இருக்கின்றனர்.

ஆகவே, இதை நல்ல சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் தி.மு.க.வை விளாசி வருகின்றன. இதனால், எதிர்வரும் நகரப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. சரிவை சந்திக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இது உ.பி.ஸ்களுக்கு உதறலை ஏற்படுத்தியது. இதையடுத்து, உஷாரான தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின், காணொளி வாயிலான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தின்போது, குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில்தான், குடும்பத் தலைவிகளுக்கு 1,000 ரூபாய் வழங்குவதற்கான விண்ணப்பம் என்று சொல்லி, போலியாக ஒரு விண்ணப்பத்தை அச்சடித்து பொதுமக்களுக்கு விநியோகித்து வருகின்றனர். மேலும், பொதுமக்களுக்கு நம்பிக்கை வரவேண்டும் என்பதற்காக மேற்படி விண்ணப்பத்தை ரேஷன் கடை ஊழியர்களிடம் கொடுத்து, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யுமாறு அறிவுறுத்தி இருக்கிறார்கள். ஆனால், குடும்பத் தலைவிகளுக்கு 1,000 ரூபாய் வழங்குவது தொடர்பாக அரசுத் தரப்பிலிருந்து எந்த அறிவிப்பும் வெளிவராத நிலையில், உ.பிஸ்கள் விண்ணப்பத்தை வழங்கி வருவது பொதுமக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனிடையே, உ.பிஸ்களின் இந்த அல்வா நாடகம் எதிர்க்கட்சிகளுக்கு தெரிந்துவிட்டது. இதையடுத்து, பா.ம.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் உ.பிஸ்களின் பித்தலாட்டத்துக்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றன. போலி விண்ணப்பங்களை விநியோகிக்கும் நபர்களை கைது செய்து மோசடியை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.


Share it if you like it