தமிழகத்திலிருந்து ஓட ஓட விரட்டுவோம்: கவர்னருக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த ‘ரெட் லைட்’ ஆர்.எஸ்.பாரதி!

தமிழகத்திலிருந்து ஓட ஓட விரட்டுவோம்: கவர்னருக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த ‘ரெட் லைட்’ ஆர்.எஸ்.பாரதி!

Share it if you like it

தமிழகத்திலிருந்து ஓட ஓட விரட்டுவோம் என்று கவர்னருக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருக்கும், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க.வினர் வலியுறுத்தி வருகின்றனர்.

நிகழாண்டுக்கான தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் கவர்னர் உரையுடன் திங்கள்கிழமை தொடங்கியது. தமிழக அரசு கொடுத்த உரையில் இடம் பெற்றிருந்த, ஆளும் தி.மு.க. ஆட்சியை புகழ்வது போன்ற வார்த்தைகளை ஸ்கிப் செய்த கவர்னர், சில வார்த்தைகளை இணைத்து பேசினார். எனவே, அரசு கொடுத்த உரையில் இடம்பெற்றிருந்த வார்த்தைகள் மட்டுமே இடம்பெறும் எனும், கவர்னர் கூடுதலாக சேர்த்து பேசிய வார்த்தைகள் இடம்பெறாது எனவும் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இது சட்டமன்றத்தின் மரபை மீறிய செயல் என்பதால், கவர்னர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.

கவர்னரின் இச்செயல் தி.மு.க.வினரை ரொம்பவே அப்செட்டாக்கி விட்டது. முதல்வர் மற்றும் சட்டமன்றத்தை அவமதித்து விட்டதாகக் கருதி வேதனையில் துடித்து வருகின்றனர். ஆகவே, கவர்னரை வசைபாடி வருகின்றனர். மேலும், கவர்னருக்கு எதிராக போஸ்டர் ஒட்டி தங்களது இயலாமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில்தான், தமிழகத்திலிருந்து ஓட ஓட விரட்டுவோம் என்று தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கவர்னருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருக்கிறார்.

அதாவது, பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இவ்விழாவில்பேசிய தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின், சட்டமன்றத்தில் தகர்த்து எறியக் கூடிய வகையில் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை நடத்திக் காட்டி இருக்கிறார். தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றபோது நான் நினைத்தேன், எதற்காக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்… என்று பதவியேற்கிறார் என்று! முத்துவேல் கருணாநிதிக்கு கொடுத்த தைரியம், இவர்கள் இருவரும் கொடுத்த தைரியத்தை ஏற்று நான் பதவியேற்கிறேன் என்று நினைத்து பதவியேற்று கொண்டதற்கு அடையாளம்.

1972 – 1973-ம் ஆண்டு நமக்கும் டெல்லிக்கும் ஒரு பிரச்னை வந்தது. அந்த நேரத்தில், இந்திரா காந்தியை அழைத்து வந்து மேடையில் உட்கார வைத்துக் கொண்டு உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்று எந்த கருணாநிதி சொன்னாரோ, அவருடைய மகன் ஸ்டாலின் சட்டசபையில் ஆளுநரையே ஓட விட்டிருக்கிறார். இதுதான் தி.மு.க. இன்று சட்டசபையில் இருந்து மட்டும் நீங்கள் ஓடியிருக்கிறீர்கள். இதற்கு மேல் சொன்னால் நன்றாக இருக்காது… நாகாலாந்தில் இருந்து எப்படி ஓடி வந்தீர்களோ, அதேபோல் தமிழகத்திலருந்தும் உங்களை ஓட ஓட விரட்டுவார்கள்” என்று கூறியிருக்கிறார்.

ஆர்.எஸ்.பாரதியின் இப்பேச்சு, கவர்னருக்கு நேரடியாக கொலை மிரட்டல் விடுப்பது போல அமைந்திருக்கிறது. ஆகவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. கட்சியினர் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி வருகின்றனர். அதேசமயம், ஆர்.எஸ்.பாரதி வாய்கொழுப்பு நிறைந்தவர் என்பது பல்வேறு சந்தர்ப்பங்களில் நிரூபணமாகி இருக்கிறது. உதாரணமாக, தமிழகத்தில் இன்று பட்டியல் சமூகத்தினர் நீதிபதிகளாக இருக்கிறார்கள் என்றால் அது கருணாநிதி போட்ட பிச்சை என்று பட்டியலின நீதிபதிகளை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்தவர். அதேபோல, தமிழகத்திலுள்ள ஊடகங்களை மும்பையிலுள்ள ரெட் லைட் பகுதியோடு ஒப்பிட்டு ரெட் லைட் மீடியாக்கள் என்று பேசியவர்.

இப்படி வாய்த் திமிராக பேசிவரும் இவரது வாய்க்கு பூட்டுப் போட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்பாக இருக்கிறது.


Share it if you like it