ஆளுநர் மாளிகை விளக்கம்!

ஆளுநர் மாளிகை விளக்கம்!

Share it if you like it

தமிழக மக்களுக்கு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் 2023 – ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணியளவில் ஆளுநர் உரையுடன் துவங்கியது. இக்கூட்டம், தொடங்கிய சில நிமிடங்களில் ஆளுநர் உரையை கண்டித்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ம.தி.மு.க, வி.சி.க. உள்ளிட்ட தி.மு.க.வின் கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதனை தொடர்ந்து, அ.தி.மு.க.வும் வெளிநடப்பு செய்தன.

ஆளுநர் உரையாற்றி கொண்டு இருக்கும் போது, எதிர்க்கட்சிகளின் அமளியை கண்டிக்காமல் முதல்வர் ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டவர்கள் கள்ள மெளனம் காத்தனர். இதன்பின்னணியில், தி.மு.க.வின் தூண்டுதல் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், தமிழக ஆளுநர் மாளிகை தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கம் இதோ ;

மற்ற மாநிலங்களை விட, அதிக அந்நிய நேரடி முதலீட்டை தமிழகம் ஈர்த்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது தவறான தகவல் என கடந்த ஜனவரி 7 – ஆம் தேதி ஆளுநர் ஆர்.என். ரவி ஆளும் கட்சியிடம் சுட்டிக்காட்டி இருக்கிறார். மேலும், மகாராஷ்டிரா -28 பில்லியன், கர்நாடகா – 25 பில்லியன், முதலீடுகளை ஈர்த்துள்ளதாகவும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தமிழகம் ஈர்த்தது வெறும் 2.5 பில்லியன் டாலர் மட்டுமே என ஆளுநர் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

Image

Share it if you like it