’நவராத்திரி வாழ்த்து’ தெரிவித்த பிரபல பாக்., பத்திரிக்கையாளர்..! ஓட்டு போட்ட ஹிந்துக்களுக்கு வாழ்த்து தெரிவிக்காத தி.மு.க தலைவர்..!

’நவராத்திரி வாழ்த்து’ தெரிவித்த பிரபல பாக்., பத்திரிக்கையாளர்..! ஓட்டு போட்ட ஹிந்துக்களுக்கு வாழ்த்து தெரிவிக்காத தி.மு.க தலைவர்..!

Share it if you like it

பாகிஸ்தானின் பிரபல பத்திரிகையாளர், எழுத்தாளர், மற்றும் மனித உரிமை ஆர்வலர், என பன்முகத்தன்மை கொண்ட, அனிஸ் பாரூக்கி. பாகிஸ்தானில் தினம், தினம், சிறுபான்மை மக்களுக்கு எதிராக நிகழும், கொடுமைகளை கண்டு நேர்மையான முறையில் தனது கருத்துக்களை துணிச்சலாக இன்று வரை தனது டுவிட்டரில் தொடர்ந்து பதிவிட கூடியவர் ஆவார்.

அண்மையில் தனது டுவிட்டர் பக்கத்தில் ராமர் கோவில் பற்றி இவ்வாறு குறிப்பிட்டு இருந்தார்.

அயோத்தி நில அகழ்வாராய்ச்சியில் பண்டைய கோவிலின் மிச்சங்கள் மற்றும் இந்துக்கள் உரிமை கோரும் வகையிலான சிலைகள் இருப்பது முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, தற்பொழுது வரலாறு சரி செய்யப்பட்டது, உண்மை நிலவுகிறது. என்று சில ஆண்டுகளுக்கு முன்பு டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார்.

இந்நிலையில் இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் வாழும் ஹிந்துக்களால் நவராத்திரி பண்டிக்கை மிகச் சிறப்பாக கொண்டாப்பட்டு வருகிறது. பாரதப் பிரதமர் மோடி, அந்தந்த மாநில முதல்வர்கள், மற்றும் நாட்டின் மிக முக்கிய பொறுப்புக்களில் உள்ளவர்கள் என பலர் தங்களின் வாழ்த்துக்களை ஹிந்து மக்களுக்கு தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வரும் தி.மு.க தலைவருமான ஸ்டாலின் அவர்கள் இன்று வரை ஹிந்து மக்கள் கொண்டாடி வரும் நவராத்திரி விழாவிற்கு வாழ்த்துக்களையோ, பாராட்டுகளையோ, தெரிவிக்காமல் வழக்கம் போல தனது ஹிந்து விரோத போக்கினையே அவர் கடைபிடித்து வருகிறார் என்பது நிதர்சனம். எங்கோ? உள்ள பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் கூட ஹிந்து பண்டிக்கைக்கு வாழ்த்து தெரிவித்து விட்டார்.

  • 90% ஹிந்துக்கள் எங்கள் கட்சியில் உள்ளனர் என்று பெருமை அடித்து கொண்ட தி.மு.க.
  • ஒரு கோடிக்கும் மேல் ஹிந்துக்கள் திமுகவில் உள்ளனர் என்று கூறிய ஆர்.எஸ். பாரதி உட்பட தி.மு.க-வின் பல மூத்த தலைவர்கள் கூட இதுவரை ஹிந்து பண்டிக்கைக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share it if you like it