நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால் சென்னையில் தண்ணீர் தேங்குது – அமைச்சர் மா.சு புதிய கண்டுபிடிப்பு..!

நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால் சென்னையில் தண்ணீர் தேங்குது – அமைச்சர் மா.சு புதிய கண்டுபிடிப்பு..!

Share it if you like it

தமிழக மருத்துவத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நிலத்தடி நீர் குறித்து அவர் தெரிவித்த கருத்து மக்கள் மத்தியில் தற்பொழுது பேசு பொருளாக மாறியுள்ளது.

தி.மு.க ஆட்சி அமைந்த பின்பு தமிழக முதல்வர் ஸ்டாலின் போன்றே அமைச்சர் பெருமக்களும் தொடர்ந்து அறிவு பூர்வமாக பேசி வருவது மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலைகளையும், வெறுப்பையும், ஏற்படுத்தி வருகிறது என்பது நிதர்சனம்.

தமிழகத்தில் சில பகுதிகளில் மின் தடை ஏற்படுவதற்கு அணில்கள் தான் காரணம் மின்சாத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியது அந்நாட்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்தது. அதனை தொடர்ந்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் சட்டமன்றத்தில் பொறியியல் படிப்பு குறித்து பேசிய காணொளி இன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில்.

நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால் சென்னையில் தண்ணீர் தேங்குகிறது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்த கருத்து மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Image


Share it if you like it