உயிரற்ற சமாதிக்கு உடனே 39 கோடி நிதி ஒதுக்கிய விடியல் அரசு..! நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி  எக்ஸ்ரே முடிவுகளை காகிதத்தில் வழங்கி வரும் அரசு மருத்துவமனை மீது கருணை காட்டுமா?

உயிரற்ற சமாதிக்கு உடனே 39 கோடி நிதி ஒதுக்கிய விடியல் அரசு..! நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி எக்ஸ்ரே முடிவுகளை காகிதத்தில் வழங்கி வரும் அரசு மருத்துவமனை மீது கருணை காட்டுமா?

Share it if you like it

தி.மு.க மூத்த தலைவர்களில் ஒருவரும் தமிழக முதல்வர் ஸ்டாலினின் தங்கையுமான கனிமொழி அவர்கள் தூத்துக்குடியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்பு தினேஷ் மரணம், மற்றும் கழக கண்மணிகள், செய்யும் சேட்டைகள், அட்டூழியங்கள், மற்றும் தமிழகத்தில் நாளுக்கு நாள் சட்டம் ஒழுங்கு மோசமாகி கொண்டே செல்வது குறித்து இன்று வரை கனிமொழி வாய் திறக்காமல் கள்ள மெளனம் காப்பது ஒருபுறம் என்றால். தூத்துக்குடியிலுள்ள கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ‘நிதி பற்றாக்குறை காரணமாக பிலிம் வாங்க முடியவில்லை’ எனக்கூறி பேப்பரில் எக்ஸ்ரே முடிவுகள் எழுதித்தரப்பட்ட அவலத்தை பற்றி இன்று வரை வாய் திறக்காமல் அதே மெளனம்.

  • பூங்காவிற்கு 2,500 கோடி,
  • ஈ.வெ.ரா-விற்கு 100 கோடி
  • கலைஞருக்கு 39 கோடி

என வெட்டி செலவுகளை செய்வதை விட்டு விட்டு ஏழை, எளியவர்களுக்கு, தரமான மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கும் வகையில் தக்க நடவடிக்கையை கனிமொழியும், தமிழக முதல்வர் ஸ்டாலினும் எடுக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it