மணிகண்டன் மரணத்தில் கள்ள மெளனம் காக்கும் ஊடகங்கள், பத்திரிக்கையாளர்கள்.!

மணிகண்டன் மரணத்தில் கள்ள மெளனம் காக்கும் ஊடகங்கள், பத்திரிக்கையாளர்கள்.!

Share it if you like it

சாத்தான் குளம் போன்று ராமநாதபுரத்தில் மீண்டும் ஒரு லாக்அப் டெத்.

ராமநாதபுர மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவர் மணிகண்டன் (வயது 21). காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்த பொழுது, சில மீட்டர் தூரம் தள்ளி தனது வாகனத்தை நிறுத்தியதற்காக நடுரோட்டில் போட்டு மாணவரை அடித்து உதைத்து உள்ளனர்.

காவல்நிலையத்திற்கு மாணவரை அழைத்து சென்று அங்கேயும் அவர் மீது கொடூர தாக்குதல் நிகழ்த்து உள்ளனர். மர்ம உறுப்பில் மிகப் பெரிய தாக்குதலை நிகழ்த்தி விட்டு, அவர் சாகும் தருவாயில் வீட்டிற்கு போன் செய்து உங்கள் மகனை அழைத்து செல்லுங்கள் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.

வீட்டிற்கு அழைத்து சென்ற பொழுது மாணவர் 3 முறைகளுக்கும் மேல் ரத்த வாந்தி எடுத்து இறுதியில் மரணம் அடைந்து உள்ளார். இதற்கு ABVP (மாணவர் அமைப்பு)  தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் பகுதியில் லாக் அப் டெத் நடைப்பெற்றது. அதே போன்ற ஒரு சம்பவம் தான் ராமநாதபுரத்திலும் தற்பொழுது நிகழ்ந்து உள்ளதாக பொதுமக்கள் உட்பட பல அரசியல் விமர்சகள் வரை தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்பு ஏற்ற நாளில் இருந்து மாணவர்களின் தற்கொலைகள், மரணங்கள், கொலைகள் என தொடர்ச்சியாக நிகழ்ந்து வருவது பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும்  கவலையையும் ஏற்படுத்தி உள்ளது. மாணவர்களின் உணர்வுகளை தூண்டி ஆட்சிக்கு வந்து தி.மு.க இன்று மாணவர்களின் மரணத்திற்கு காரணமாக மாறி வருகிறது என பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டை முன்வைக்கும் சூழல் தற்பொழுது தமிழகத்தில் ஏற்பட்டு உள்ளது.

எதற்கெடுத்தாலும் கொடி பிடித்து கோஷம் எழுப்பும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாணவர் அமைப்பு, உட்பட எந்த ஒரு போராளியும் கூட மணிகண்டன் மரணத்திற்கு குரல் கொடுக்கவில்லை, காரணம் என்னவெனில் அவர் ஒரு ஹிந்து மாணவர் என்பதே இதற்கு காரணம் என்று பலர் கருத்து கூறி வருகின்றனர். மரணத்திலும் மதத்தை பார்க்கும் இவர்களை போன்ற போலி போராளிகளை இப்பொழுதாவது மாணவர்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

மாணவர்கள் தலையில் வைத்து கொண்டாடப்படும் சினிமா நட்சத்திரங்கள் கூட மணிகண்டன் மரணத்திற்கு தங்களது இரங்கலையோ, தவறு செய்தவர்களுக்கு எதிராக இன்று வரை கருத்து தெரிவிக்கவில்லை என்பதில் இருந்தே இவர்களின் உண்மையான சுயரூபத்தை அறிவார்ந்த தமிழக மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மணிகண்டன் மரணத்திற்கு காரணமானவர்கள் எந்த பின்புலத்தை கொண்டு இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ABVP (மாணவர் அமைப்பு)  தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்து உள்ளது.

மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், மன உளைச்சல்களை, யாரிடம் சொல்வது என தெரியாமல் தவிக்கும் சூழல் தமிழகத்தில் தற்பொழுது நிலவி வருகிறது. பள்ளி மாணவி பொன்தாரணிக்கு ஏற்பட்ட அநீதியை போன்று இனிமேலும் எந்த ஒரு மாணவருக்கும் ஏற்படாத வகையில் பள்ளி கல்லூரிகளில் மாணவர் பேரவை தேர்தலை உடனே நடத்த வேண்டும், என ABVP மாணவர் அமைப்பின் தேசிய செயலாளர் முத்து ராமலிங்கம் அவர்கள் தமிழக அரசிற்கு மீண்டும் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it