ஸ்டெர்லை போராட்டத்தில் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டதே மோடி தான் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்.
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த காப்பர் ( ஸ்டெர்லைட்) ஆலையில் இருந்து வெளியேறும் புகை அப்பகுதியில் வசிக்கும் மக்களின் உடல் நலத்திற்கு மிகப் பெரிய கேட்டினை உருவாக்குகிறது என்று ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் மிகப் பெரிய போராட்டத்தை நடத்தினர். போராட்டம், கலவரமாக மாறிய பின்பு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது அரசின் முழு பொறுப்பு என்பதை சட்டம் அறிந்த அனைவருமே நன்கு அறிவர்.
கலவரத்தை தூண்டி பொது அமைதியை கெடுக்கும் வகையில் நடந்து கொண்ட நபர்கள் மீது அப்பொழுது இருந்த ஆளும் கட்சி துப்பாக்கி சூடு நடத்தியது இதில் 13 பேர் மரணம் அடைந்தனர். மாநில அரசு எடுத்த நடவடிக்கைக்கு, மத்திய அரசு தான் காரணம் என தமிழக முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின். பாரதப் பிரதமர் மோடி மீது அபாண்டமான பொய்யினை கூறியுள்ளார். கருத்து சுதந்திரம் பற்றி மாற்று கட்சியை சேர்ந்தவர்களுக்கு பாடம் நடத்தும் தி.மு.க-வினர் ஸ்டெர்லைட் ஆலை குறித்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறியதற்கு இன்று வரை கண்டனம் தெரிவிக்கவில்லையே ஏன்? என மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.