நீலகிரியில் சட்ட விரோதமாக மலையை குடையும் அவலம்.
நீலகிரி மாவட்ட ஆட்சியராக இன்னசென்ட் திவ்யா இருக்கும் வரை சட்ட விரோதமாக, செயல்பட முயலும் நபர்கள் மீது இவர் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தொழிலதிபர்கள், அரசியல் புள்ளிகள், பணம் படைத்த முதலைகள், ஆளும் கட்சியை சேர்ந்த புள்ளிகள் என பலர் கொடுத்த அழுத்தம் காரணமாக அவர் மாற்றப்பட்டதாக பொதுமக்கள் உட்பட பலரும் வெளிப்படையாக இன்று வரை கருத்து கூறி வருகின்றனர்.
இன்னசென்ட் திவ்யா மாற்றப்பட்ட பின்பு நீலகிரியின் நிலைமையே தற்பொழுது முற்றிலும் மாறி விட்டதாக தொடர் குற்றச்சாட்டுகளை அந்த பகுதி மக்கள் கூறி வரும் நிலையில் பிரபல இணையதள ஊடகமான ஜீனியர் விகடன் கேத்தி பள்ளதாக்கு பகுதியில் நள்ளிரவில் மிக ரகசியமாக மலை குடைய படுவதாக பகீர் காணொளி ஒன்றினை வெளியிட்டு இருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வன விலங்குகள், இயற்கை ஆர்வலர்கள், என்று தம்மை கூறிக் கொள்ளும் பியூஸ் மானுஸ், பூ உலகின் நண்பர்கள், திமுக சுற்றுச்சூழல் செயலாளர் மற்றும் சில்லறை போராளிகள், உட்பட யாரும் இந்த விடியல் ஆட்சியில் நிகழும் அட்டூழியம் குறித்து வாய் திறக்காமல் இருப்பது ஏன்? என பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.