அரசு உதவி பெறும் டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிவறை சுற்று சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் மரணம்.
திருநெல்வேலி பகுதியில் அமைந்து உள்ள டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிவறை சுற்று சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் 3 மாணவர்கள் உயிர் இழந்த சம்பவம் தமிழக மக்களிடையே மிகப் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் உயிர் இழப்பிற்கு காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏபிவிபி மாணவர் அமைப்பு உட்பட பல அமைப்புகள் தமிழக அரசிற்கு தொடர் கோரிக்கையை வைத்து வருகின்றனர்.
அரசு உதவி பெறும் பள்ளியின் நிலைமையே இப்படி என்றால், தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளின் நிலைமை எவ்வாறு? இருக்கும் என்பதை தமிழக மக்கள் எளிதில் அறிந்து கொள்ள முடியும். 2,500 கோடியில் பூங்கா, 39 கோடியில் கலைஞர் நினைவிடம் கட்டுவதற்கு ஒதுக்கிய நிதியினை ஏழை மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த தி.மு.க அரசு உடனே முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- பூங்காவிற்கு 2,500 கோடி,
- ஈ.வெ.ரா-விற்கு 100 கோடி
- கலைஞருக்கு 39 கோடி
https://mobile.twitter.com/news7tamil/status/1472143943953387523

https://mobile.twitter.com/news7tamil/status/1472147353540825089

https://mobile.twitter.com/polimernews/status/1472107134510764034






















