மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டை முற்றுகையிட்ட பார் உரிமையாளர்கள்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை உடனே மூடுவோம் என்று ஸ்டாலின், கனிமொழி, பட்டத்து இளவரசர் உதயநிதி ஸ்டாலின் உட்பட தி.மு.க-வின் பல முன்னணி தலைவர்கள் தமிழக மக்களுக்கு உறுதியான வாக்குறுதியை அள்ளி தெளித்தனர். அதனை நம்பி பெண்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலர் ஆர்வமுடன் விடியல் அரசிற்கு வாக்களித்தனர். ஆட்சியில் அமர்ந்த பின்பு தங்களது வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டு மது கடைகளை இன்று வரை மூடாமல் தொடர்ந்து மெத்தன போக்கிலேயே தி.மு.க அரசு செயல்பட்டு கொண்டு இருக்கிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் மதுவிற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஒருபுறம். பள்ளி சிறுவர்கள், கல்லூரி மாணவர்கள், பெண்கள் என பலர் குடிக்க ஆரம்பித்து இருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மது குடித்த தந்தையை திருத்த விஷம் குடித்து 15 வயது மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம். அதனை தொடர்ந்து சிறுவர்கள் சிலர் மது அருந்திய சம்பவம். குடித்து விட்டு பேருந்தில் ரகளை செய்த குடிகார சாந்தி என தமிழக கலாச்சாரம் மெல்ல மெல்ல சீரழிந்து வரும் நிலையில்.
பார் டெண்டர் உரிமையை தி.மு.கவினருக்கே அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கி விட்டார் என அவரின் வீட்டின் முன்பு பார் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுவை ஒழித்து நல்லாட்சி தருவோம் என்று கூறிய கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் எங்கே? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.