தி.மு.க ஆட்சியில் நாளுக்கு நாள் மோசம் அடையும் சட்டம், ஒழுங்கு.
தி.மு.க ஆட்சியில் மக்கள் அச்சத்துடனும், பயத்துடனும், வாழும் சூழல் தற்பொழுது ஏற்பட்டு உள்ளது. பத்திரிக்கைகள், சமூக வலைத்தளங்கள், ஊடகங்களில் வரும் செய்திகளே இதற்கு சிறந்த சான்று. ஆளும் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள், கழக கண்மணிகளின் சேட்டைகள், அட்டூழியங்கள், ஒருபுறம் என்றால். மற்றொருபுறம் தமிழகத்தில் நாளுக்கு நாள் மோசமடையும் சட்டம், ஒழுங்கு என பொற்கால ஆட்சி மக்கள் அச்சத்துடனும், பயத்துடனும் வாழும் சூழல் ஏற்பட்டு உள்ளது என்பது அனைவரின் கருத்து.
தமிழக காவல்துறை, டிஜிபி-யின் கண்ட்ரோலில் இல்லை என்று, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, சமீபத்தில் பகீர் தகவலை பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியிருந்தார். அதனை மெய்ப்பிக்கும் விதமாக, பொற்கால ஆட்சியில் செங்கல்பட்டு மாவட்டம் காவல் நிலையம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும், இருவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு உள்ளனர். இது குறித்த மேலும் தகவல்களுக்கு பாலிமர் லிங்க கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.
- பாரதப் பிரதமர் மோடி அவர்களை கொலைகாரன் என்று கூறிய விடுதலை சிறுத்தை கட்சியின் மூத்த தலைவர் வன்னியரசு மீது நடவடிக்கை எடுக்காமல் மெளனம்.
- வன்னியரசு மீது காவல்துறையில் பா.ஜ.க நிர்வாகிகள் புகார் மனு கொடுத்த பின்பும் மெளனம்.
- பா.ஜ.க பெண் நிர்வாகி காயத்திரி ரகுராம் அவர்களை கீழ்த்தராமக விமர்சனம் செய்த தி.மு.க நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்காமல் மெளனம்.
- யார் அவர்? எந்த கட்சி அவர்? என்பதை பார்த்த பின்பே வழக்கு பதிவு செய்யும் அவலம் தமிழக காவல்துறையிடம் இருப்பதாக பலர் குற்றம் சுமத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.