தமிழக அரசின் மஞ்சள் பை பிரச்சாரம்.
பொங்கல் பண்டிகை, வெகு விரைவில் வர உள்ளதால். தமிழக அரசு ரேஷன் அட்டை, வைத்து உள்ள பொதுமக்களுக்கு. பொங்கல் பரிசு பொருட்களை தற்பொழுது விநியோகம் செய்து வருகிறது. பாம்பு எலியை தவிர பல்லி, வண்டு, புழு, பூச்சி, என அனைத்து ஜீவராசிகளும் இடம் பெற்று இருப்பது பொதுமக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
’ஹிந்தி தெரியாது போடா’ என்ற வாசகம் கொண்ட ’டீ சர்ட்’ அணிந்து. ஹிந்தி பேசும் மக்களின், உணர்வுகளை காயப்படுத்தி விட்டு, ஹிந்தி பேசும் மாநிலங்களில், இருந்து பொருட்களை கொள்முதல் செய்து. தமிழக மக்களுக்கு வழங்கி வருவது ஒருபுறம் என்றால். பிளாஸ்டிக் பொருட்களின், ஆதிக்கத்தை முற்றிலும் குறைக்க. சுற்றுச்சூழலை பாதுகாக்க, மீண்டும் மஞ்சள் பையை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு. கொண்டு வர வேண்டும், என்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின், சமீபத்தில் மிக பிரமாண்டமான, முறையில் ’மஞ்சள் பையை’ அறிமுகப்படுத்தும் விழாவினை தொடங்கி வைத்தார்.
பல்வேறு ஊடகங்கள், முன்களபணியாளர்கள், தி.மு.க ஆதரவு பெற்ற பியூஸ் மானுஸ், போன்ற சூற்றுச்சூழல் போராளிகள். என பலர் தமிழக. அரசின் இந்த முயற்சிக்கு தங்களது பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும், தெரிவித்து இருந்தனர். ஜெர்மன் நாட்டு அமைப்போடு இணைந்து “மஞ்சள் பை” பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று தி.மு.க அரசு பெருமையோடு அறிவித்து இருந்தது. இந்த நிலையில் தமிழக அரசு வழங்கும் ’பொங்கல் பரிசு பொருட்கள்’ அனைத்தும் சுற்றுசூழலுக்கு தீங்கும் இழைக்கும் வகையிலான பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளது என மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.