அரசு வேலை வாங்கி தர லஞ்சம் கேட்ட தி.மு.க நிர்வாகியின் வைரலாகும் காணொளி.
நான் ஆட்சிக்கு, வந்தால் தமிழக மக்களுக்கு நேர்மையான, உண்மையான, நிர்வாகத்தை வழங்குவேன். எனக்கு வாக்களியுங்கள் என்று எதிர்க்கட்சியாக இருந்த பொழுது மக்களுக்கு உறுதி மொழி அளித்து இருந்தார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். ஆனால் ஆட்சியில் அமர்ந்த பின்பு, மக்களுக்கு கொடுத்த, வாக்குறுதிகளை தி.மு.க அரசு, நிறைவேற்றவில்லை, என்று மக்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள், எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள், மீது தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள், குவிந்த வண்ணம் இருப்பதை சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள், பத்திரிக்கைகள், தொடர்ந்து செய்திகளாக வெளியிட்டு வரும் நிலையில். தி.மு.க நகர செயலாளர் சூர்யா என்பவர், அரசு வேலை வாங்கி தர லஞ்சம் கேட்கும். காணொளியை பிரபல இணையதள ஊடகமான தினமலர் அம்பலப்படுத்தியுள்ளது.