ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பணம் வழங்க, முதல்வருக்கு மனம் இல்லையா? என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அ.தி.மு.க அரசு ஆட்சியில் இருந்த பொழுது, ரேஷன் அட்டைதார்களுக்கு 2,500 ரூபாய் பணம் வழங்கியது. இது போதாது மேலும், 2,500 ரூபாய் சேர்த்து, வழங்க வேண்டும் என்று அப்போதைய ஆட்சியாளர்களிடம் கோரிக்கை வைத்தது தி.மு.க.
அதனை தொடர்ந்து, தமிழகத்தில் ஆட்சி, மாற்றம் ஏற்பட்டு. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். விடியல் கிடைக்கும் என்று ஆட்சி மாற்றத்தை விரும்பிய, மக்கள் இன்று வரை இருளில் தத்தளித்து வருகின்றனர் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.
- 2,500 கோடியில் சென்னையில் பூங்கா.
- 100 கோடி-யில் ஈ.வெ.ரா-விற்கு சிலை,
- 39 கோடியில் கலைஞருக்கு நினைவிடம்,
- பிரஷாந்த் கிஷோருக்கு 350 கோடி
இதற்கு எல்லாம் பணம் இருக்கு. ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டும் கொடுக்க பணம் இல்லையா? அல்லது மனம் இல்லையா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழக முதல்வருக்கு ஆலோசனை வழங்க இதில் 5 பொருளாதார நிபுணர்கள் வேறு என்று நெட்டிசன்கள் தங்களது கோவத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.