தேசியக் கொடியை அவமதித்த ஸ்டாலின், தமிழர்களின் உணர்வுகளை இழிவுபடுத்திய ஈ.வெ.ராமசாமிக்கு குடியரசு தின அணிவகுப்பில் முக்கியத்துவம் கொடுத்திருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
73-வது குடியரசு தினத்தை கொண்டாடி வரும் பாரத தேசத்திற்கு, வல்லரசு நாடுகள் முதல் சிறிய நாடுகள் வரை வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை வேண்டி போராடி, தங்களது இன்னுயிர்களை நீத்த தியாக தீபங்களை ஒவ்வொரு மாநிலங்களும் போற்றி கெளரவப்படுத்தி இருக்கின்றன.
திருக்குறள் தங்க தட்டில் வைத்த மலம், வெள்ளையன் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது. இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கக் கூடாது என்றெல்லாம் பேசியதோடு, ஆண்களைப் போல் முடி வெட்டிக்கோ, டிரெஸ் போட்டுக்கோ, ஆண்கள் பெயரை வை, ஆண்களை போல் வளர், பெண்களுக்கு கற்பு எதற்கு என்று கேட்டவர்தான் ஈரோடு வெ.ராமசாமி. மேலும், அனுதினமும் இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து கருத்துத் தெரிவித்து வந்தவர் ராமசாமி.
அதேபோல, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து விட்டு, மரியாதை கூட செலுத்தாமல், அவமதித்து விட்டுச் சென்றவர் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். அப்படிப்பட்ட ஸ்டாலின், நாட்டின் 73-வது குடியரசு தின அணிவகுப்பில் ஈரோடு வெ.ராமசாமிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். இதுதான் மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.