இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவது அவர்களது உரிமை என்று குரல் கொடுத்த தமிழக போராளிகள், அரியலூர் மாணவி லாவண்யா மற்றும் சேலம் மாணவி சுகன்யா விவகாரத்தில் குரல் கொடுக்காதது ஏன்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
கர்நாடகா மாநிலம் உடுப்பி அரசு கல்லூரியில் பயிலும் மாணவிகளிடையே சீருடை தொடர்பாக மிகப் பெரிய சர்ச்சை எழுந்தது. இதுநாள் வரை கல்லூரிக்கு சீருடையில் வந்த இஸ்லாமிய மாணவிகள் சிலர், இனிமேல் நாங்கள் ஹிஜாப் மட்டுமே அணிந்து வருவோம். கல்லூரி நிர்வாகத்தின் சட்ட திட்டங்களுக்கு மதிப்பளிக்க மாட்டோம் என்ற வகையில் நடந்து கொண்டனர் என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில், ஹிஜாப் அணிய அவர்களுக்கு உரிமை இருக்கிறது என்றால், காவி நிறத்தில் உடை அணிய எங்களுக்கும் உரிமை வேண்டும் என்று ஹிந்து மாணவ, மாணவிகள் உரிமை கேட்டு போராடியதுதான் தற்பொழுது நாடு முழுவதும் பேசு பொருளாக மாறியிருக்கிறது.
ஹிஜாப் அணிவது மாணவிகள் உரிமை, அதில் யாரும் தலையிடக் கூடாது; இது தேசத்தை பிளவுப்படுத்தும் முயற்சி: இதற்குப் பின்னால் பா.ஜ.க. இருக்கிறது என்று தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க.வினரும், அக்கட்சியின் ஆசி பெற்ற பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் என பல்வேறு தரப்பு போலி போராளிகளும் ஒருமித்த குரலில் அபாண்டமான பழியை சுமத்தினர். இஸ்லாமிய மாணவிகள் என்றவுடன் குரல் கொடுக்க ஓடிவந்த இவர்கள்தான், கிறிஸ்தவ பள்ளியின் மத மாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி லாண்யாவிற்கும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சுகன்யாவுக்கும் நிகழ்ந்த அநீதிக்கு எதிராகவும் இன்றுவரை ஏன் குரல் கொடுக்கவில்லை என்பது மில்லியன் டாலர் கேள்வி. இதைத்தான் பலரும் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.