மாணவர்கள் மீது போலீஸ் தொடர் தாக்குதல்? பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அதிருப்தி..!

மாணவர்கள் மீது போலீஸ் தொடர் தாக்குதல்? பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அதிருப்தி..!

Share it if you like it

தமிழக முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காவல்துறை மீது தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது கடும் அதிருப்தியை மீண்டும் பதிவு செய்திருக்கிறார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் மணிகண்டன் (வயது 21). சமீபத்தில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, மணிகண்டனின் பைக்கை தடுத்தி நிறுத்தி இருக்கிறார்கள். அப்போது, மணிகண்டன் சில மீட்டர் தூரம் தள்ளி தனது பைக்கை நிறுத்தி இருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த போலீஸார், மாணவரை அடித்து உதைத்திருக்கிறார்கள். மேலும், காவல் நிலையத்திற்கும் அழைத்துச் சென்று அங்கும் மிருகதனமாக தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.

பின்னர், மணிகண்டனின் பெற்றோருக்கு போன் செய்த போலீஸார், காவல் நிலையத்தில் இருந்து அவரை அழைத்துச் செல்லுமாறு கூறியிருக்கிறார்கள். பெற்றோரும் வந்து மணிகண்டனை வீட்டிற்கு அழைத்து சென்றனர். ஆனால், சில மணிநேரம் கழித்து ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்து விட்டார் மணிகண்டன். இச்சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு காவல்துறைதான் காரணம் என்று பொதுமக்கள் உட்பட பலரும் தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தனர்.

மேலும், மணிகண்டன் தற்கொலை வழக்கை நேர்மையான முறையில் தமிழக காவல்துறை விசாரணனை செய்ய வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில்தான், சென்னை சட்டக் கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம் என்பவர், முகக் கவசம் அணியாமல் வந்தார் என்பதற்காக, அவர் மீது காவல்துறையினர் மிருகத்தனமான தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆகவே, முதல்வர் ஸ்டாலின் வசம் இருக்கும் காவல்துறையின் அராஜகத்திற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீண்டும் தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார். இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், சென்னையில் சட்டக்கல்லூரி மாணவரான வியாசர்பாடியைச் சேர்ந்த அப்துல் ரஹீம் முகக் கவசம் அணியாமல் வந்தார் என்பதற்காக காவல் நிலையத்தில் வைத்துத் தாக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்தேன்! தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்களால் காவல்துறையில் நேர்மையாக பணிபுரிபவர்களுக்கும் தலைக்குனிவு ஏற்படுகிறது என்று தெரிவித்திருக்கிறார்.


Share it if you like it