கொளத்தூரை தொடர்ந்து நடுத்தெருவுக்கு வந்த சிட்லபாக்கம் மக்கள்.!

கொளத்தூரை தொடர்ந்து நடுத்தெருவுக்கு வந்த சிட்லபாக்கம் மக்கள்.!

Share it if you like it

ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பு ஏற்ற பின்பு, பொதுமக்கள் நடுத்தெருவுக்கு வந்து போராடும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. முதல்வர் தொகுதியை சேர்ந்த கொளத்தூர் மக்கள் போராடி வரும் நிலையில், சிட்லபாக்கத்தை சேர்ந்த மக்களும் நடுத்தெருவிற்கு வந்து போராடிய காணொளி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் சமீபத்தில், பெய்த கனமழையில் கொளத்தூர் தொகுதி மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. எந்த ஒரு ஊடகமும் கொளத்தூர் தொகுதியின் அவலத்தை எடுத்து கூற முன்வராத நிலையில். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை முதல்வர் தொகுதியின் அவலத்தை வெளிச்சம் காட்டியதை அடுத்தே தமிழகம் முழுவதும் இச்செய்தி பேசுபொருளாக மாறி இருந்தது.

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட எங்களுக்கு முழுமையான நிவாரண உதவிகளைக் கூட ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் செய்யவில்லை என்று கொளத்தூர் தொகுதி மக்கள் ரத்தக் கண்ணீர் வடித்து வந்த நிலையில் தான்., தமிழக அரசு மற்றொரு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது. அது என்னவெனில்., எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கொளத்தூர் பகுதிக்கு உட்பட்ட சில இடங்களில் இருந்த ஏழை எளிய மக்களின் வீடுகளை தி.மு.க. அரசு இடித்துத் தள்ளியது. இதனால், தங்களது வீடுகளையும், உடைமைகளையும், இழந்த கொளத்தூர் தொகுதி மக்கள் கதறி அழுத காணொளியை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும்.

அந்த வகையில் சிட்லபாக்கத்தில் வசித்து வந்த 400 குடும்பங்களுக்கு எந்தவித அவகாசமும் வழங்காமல் அவர்களின் வீடுகளை இடித்து தள்ளியுள்ளது தி.மு.க அரசு. பா.ஜ.க, மோடி, அண்ணாமலை, என்றால் அலரும் தமிழக மீடியாக்கள், வழக்கம் போல இது குறித்து பேசாமல் மெளனம் காத்து வருகிறது. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பு ஏற்ற பின்பு, பொதுமக்கள் நடுத்தெருவுக்கு வந்து போராடும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது தமிழக மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிட்லபாக்கம்: 400 குடும்பங்களைக் காலிசெய்ய நோட்டீஸ்


Share it if you like it