கிறிஸ்தவர்கள் ஓட்டு இனி கிறிஸ்தவர்களுக்கே, என்று சிறுபான்மை மக்கள் நல கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.
சிறுபான்மை மக்களின் உண்மையான பாதுகாவலர்கள், நாங்கள் மட்டுமே என்று மேடைதோறும் தி.மு.க.வினர் முழங்கி வருகின்றனர். மேலும், அவர்களின் மதம் சார்ந்த விழாக்கள், பண்டிகைகள் அனைத்திலும் முதல்வர் கலந்து கொள்வது வழக்கம். இதற்கு முக்கிய காரணம் ஓட்டு அரசியல் என்பதை அனைவரும் நன்கு அறிவர். ஆனால், கிறிஸ்தவ பாதிரியார்கள் தி.மு.க.வை எந்த அளவிற்கு, இழிவுப்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு தொடர்ந்து இழிவுப்படுத்தி வருகின்றனர். அது பற்றியெல்லம், கவலைப்படாமல் தி.மு.க தலைவர் தொடர்ந்து அவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறார்.
கடந்த ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பேரூராட்சியில், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இணைந்து நிகழ்ச்சி ஒன்றினை நடத்தி இருந்தனர். இதில், கலந்து கொண்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, தி.மு.க. ஜெயித்தது கிறிஸ்தவ மக்களும், முஸ்லீம் மக்களும் உங்களுக்கு போட்ட பிச்சை இதை மறந்து விடாதீர்கள் என்று ஸ்டாலின் அரசை எச்சரிக்கும் விதமாக பேசியிருந்தார்.
அதே போல, இஸ்லாமிய மதகுரு ஒருவர் கூறியதாவது; ஜமாத்தில் இமாம்கள் தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும், என்று கேட்டுக் கொண்டதன் காரணமாகவே 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற, நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றது. “இஸ்லாமியர்கள் பொதுமேடையில் பேசுவதை கவனிப்பார்கள், செயல்படுத்த மாட்டார்கள். ஆனால், வெள்ளிக்கிழமை பள்ளிவாசலில் ஜும்மா மேடையில் சொல்லப்பட்டால் கண்டிப்பாக அதுசெயல்படுத்தப்படும். இதற்கு உதாரணம் என்னவென்றால், பல மாநிலங்களில் ஜும்மாவில் இமாம்கள் பேசவில்லை. ஆனால் தமிழகத்தில் மட்டும் ஜும்மாவில் இமாம்கள் யாருக்கு, வாக்களிக்க வேண்டும் யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்று பேசினார்கள். இதனால் நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தலில், ஒரு தீர்ப்பு வந்த பொழுது தமிழகத்தில் மட்டும் வேறு தீர்ப்பு வந்தது. ஜும்மாவின் இமாம்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் யாரை புறக்கணிக்க வேண்டும் என்றும் பேசியதன் விளைவாகவே இந்த தீர்ப்பு கிடைத்தது என்று பேசி இருந்தார்.
இப்படியாக, கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும், தி.மு.க.வை கீழ்த்தரமாகவும், அருவக்கதக்க வகையிலும் தொடர்ந்து இழிவுப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தான், கிறிஸ்தவர்கள் ஓட்டு இனி கிறிஸ்தவர்களுக்கே, என்று சிறுபான்மை மக்கள் நல கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது. அதன் லிங்க் இதோ.