ஏலத்துக்கு செல்லும் நகைகள் போராட்டத்தில் குதித்த மக்கள்!

ஏலத்துக்கு செல்லும் நகைகள் போராட்டத்தில் குதித்த மக்கள்!

Share it if you like it

இராமநாதபுர மாவட்டம் மண்டபம் ஊராட்சியில் உள்ள தாமரை குளம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் நகைகடன் தள்ளுபடி வேண்டும் என போராட்டம் நடத்திய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.

நீட் தேர்வு ரத்து, மகளிருக்கு 1000 ரூபாய், பெட்ரோல் விலை குறைப்பு, கல்வி கடன் மற்றும் நகைக்கடன் ரத்து என ஏராளமான வாக்குறுதிகளை தி.மு.க தலைவர் ஸ்டாலின் கடந்த சட்டமன்ற தேர்தலில் கொடுத்து இருந்தார். எங்களால் மட்டுமே தமிழகத்திற்கு, விடியலை தர முடியும் என அப்பாவி மக்களை நம்ப வைத்தது அந்தகட்சி. அதன் காரணமாக, பொதுமக்கள் தி.மு.க.வை ஆட்சி கட்டிலில் அமர வைத்தனர். நாட்கள் செல்ல செல்ல தி.மு.க-வின் சாயம் தற்பொழுது வெளுக்க துவங்கியுள்ளது.

அந்த வகையில், தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் நகைகடன் தள்ளுபடி உண்டு. உங்கள் வீட்டில் உள்ள நகைகளை அடகு வையுங்கள் என அப்பாவி மக்களை தூண்டி விட்டனர். இதன் காரணமாக, பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் சென்று, தங்களது நகைகளை அடகு வைத்தனர். அதன்பின்பு, ஆளும் தி.மு.க அரசு தனது உண்மையான சுயரூபத்தை காட்டியுள்ளது. தகுதியானவர்களுக்கு மட்டுமே நகைகடன் தள்ளுபடி உண்டு என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சமீபத்தில் கூறியிருந்தார். அமைச்சரின் இந்த கருத்து, தி.மு.க.வை நம்பி தங்களது நகைகளை அடகு வைத்த பொதுமக்கள் மத்தியில் கடும் கோவத்தையும் ஏற்படுத்தி இருந்தது. அதன்படி, இராமநாதபுர மாவட்டம் மண்டபம் ஊராட்சியில் உள்ள தாமரை குளம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள், நகைகடன் தள்ளுபடி வேண்டும் என மத்திய கூட்டுறவு வங்கி முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க.வை நம்பி மோசம்போன பொதுமக்கள் பேசிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.


Share it if you like it