சூப்பர் மார்க்கெட் கடைக்கு செல்லும் வழியை அடைத்து தண்ணீர்பந்தல் அமைத்து தி.மு.க.வினர் அட்டூழியம்.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பா.ஜ.க மற்றும் பல தொண்டு நிறுவனங்கள் தண்ணீர் பந்தல் மற்றும் நீர்மோர் பந்தல்களை அமைத்து தங்களால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர். மேலும், சத்தமில்லாமல் பல தன்னார்வலர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். நாங்களும் தண்ணீர் பந்தல் அமைப்போம், பொதுமக்களுக்கு உதவிகள் செய்வோம் என தி.மு.க.வினர் செய்யும் வெட்டி விளம்பரங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. அந்தவகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினத்தில் சூப்பர் மார்க்கெட் கடைக்கு செல்லும் வழியை அடைத்து தண்ணீர்பந்தல் அமைத்து உள்ளனர்.
தி.மு.க.வினரின் அராஜக செயலை கண்டித்து சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியுள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், போராட்டம் நடத்திய உரிமையாளரிடம் சாலையில் இது போன்ற நடந்து கொள்வது தவறு என்று கண்டித்துள்ளார். உரிய அனுமதி பெறாமல் தண்ணீர் பந்தல் அமைத்த தி.மு.க.வினரை கண்டிக்காமல் கடை உரிமையாளரை மிரட்டும் வகையில் காவல்துறை நடந்து கொண்ட விதம் கடும் கண்டனத்திற்குறியது என பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபுவின் கண்ட்ரோலில் இல்லை என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சமீபத்தில் கடுமையான குற்றசாட்டினை முன்வைத்து இருந்தார். அதனை மெய்ப்பிக்கும் வகையில், இந்த சூப்பர் மார்க்கெட் சம்பவம் ஒரு சிறந்த உதாரணம் என்பது குறிப்பிடத்தக்கது.