சினிமாவில் அரசியல் தலையீடு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதாக பிரபல இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் வேதனை தெரிவித்துள்ளார். 9 மாத ஆட்சிக்கே இப்படி கதறினால் எப்படி? இனிமேல் தான் ஸ்பெஷல் ஐட்டம் எல்லாம் இருக்கு என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தி.மு.க எப்பொழுது எல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுது எல்லாம் அராஜகம், அட்டூழியம், அடாவடிகள் அதிகரித்து வருவதை கண்கூடாக காண முடியும். கடந்த 9 மாதங்களாக தி.மு.க நடத்தி வரும் அவல ஆட்சியே இதற்கு சிறந்த உதாரணம். பெண்கள், பள்ளி மாணவிகள் மற்றும் பெண் காவலர்களுக்கு தி.மு.க. நிர்வாகிகள் கொடுக்கும் மரியாதையின் மூலம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு உள்ளது என்பதை எளிதில் அறிந்து கொள்ள முடியும்.
கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய தொழில் நிறுவனங்கள் வரை பலத்த அடியை சந்தித்துள்ளது. இந்த நிலையில் தான், ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. இதன்மூலம், தி.மு.க.வினர் அனைத்து துறைகளிலும் தங்களது முழு ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். இதுதவிர, சினிமாவில் சன்குடும்பம் செய்யும் தலையீடுகள் கொஞ்சம் நஞ்சமல்ல என்பதே பல திரைப்பட இயக்குனர்களின் உள்ள குமுறலாக இருந்து வருகிறது. மேலும், சன்குடும்பத்தின் ஆசி இருந்தால் மட்டுமே திரையரங்குகளில் இடம் கிடைக்கும் என்பதே யாரும் மறுக்க முடியாத உண்மை.
அந்த அளவிற்கு, தி.மு.க.வினரின் ஆதிக்கம் தலைவிரித்து ஆடிவருகிறது. இந்த நிலையில், திரைப்பட இயக்குனரும் பிரபல நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் தந்தி டிவிக்கு அண்மையில் பேட்டியளித்து இருந்தார். அப்பேட்டியில், நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் கூறியதாவது; சினிமாவில் தற்பொழுது அரசியல் தலையீடு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவது போன்ற உணர்வு எனக்கு உள்ளது. கடந்த 12 வருடங்களுக்கு முன்பு இதே போன்றதொரு நிலைமை இருந்தது. இப்பொழுது, அதே போன்ற நிலைமை வந்து கொண்டு இருப்பதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார். 9 மாத ஆட்சிக்கே இப்படி கதறினால் எப்படி? இனிமேல் தான் ஸ்பெஷல் ஐட்டம் எல்லாம் இருக்கு என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.