நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு வேண்டும் என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நீட் மசோதாவை தாக்கல் செய்ததே தி.மு.க தான் என்ற அதிர்ச்சி தகவலை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு நீட் தேர்வினை நடைமுறைக்கு கொண்டு வந்தது. கல்வியாளர்கள், புகழ்பெற்ற மருத்துவர்கள் என பலரும் நீட் தேர்விற்கு தங்களது ஆதரவினை தெரிவித்திருந்தனர். அதேபோல, இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களும், நீட் தேர்விற்கு தங்களது முழு ஆதரவினை தெரிவித்து உள்ளனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்கள் நீட் தேர்விற்கு எதிராக தொடர்ந்து பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தான் காங்கிரஸ் ஆட்சியில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்த திமுக எம்பி காந்தி செல்வன்தான், 2010 டிசம்பர் 21-ம் தேதி நீட் மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார் என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பகீர் தகவலை தெரிவித்து உள்ளார்.