தி.மு.க ஆட்சியில் அமர்ந்த பின்பு ஹிந்து கோவில்கள் அதிகம் இடித்து வரும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டம் அயன்பேரையூர் கிராம மக்கள் எங்கள் விநாயகர் கோவிலை இடிக்க வேண்டாம் என்று கதறி அழுத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க ஆட்சி அமைந்த நாளில் இருந்தே, ஹிந்து ஆலயங்களை குறிவைத்து, இடிக்கும் சம்பவங்கள், அதிகரித்த வண்ணம் உள்ளது. கோயம்புத்தூர் பாரதி நகரில், பகவான் கிருஷ்ணர் சிலை ஒன்று, சமீபத்தில் உடைக்கப்பட்டுள்ள சம்பவம். பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஹிந்துக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருந்தது. அதனை தொடர்ந்து, செங்கல்பட்டு, மாவட்டம் தாம்பரம் பகுதியில், ராமர் கோவில் ஒன்று இடிக்கப்பட்டு உள்ளது. இப்படி, தொடர்ந்து தமிழகத்தில் ஹிந்து ஆலயங்கள் குறிவைத்து இடித்து வரும் செய்திகள், ஹிந்து மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்து, அந்நிய மதமாற்றும் சக்திகளுக்கு ஆளும் கட்சி துணை போகும் நடவடிக்கை என பல்வேறு ஹிந்து அமைப்புகள் தங்களது கடும் கோவத்தை வெளிப்படுத்தி வருகின்றன.
சிறுபான்மை மக்களின், உணர்வுகளை காயப்படுத்தி, விட கூடாது என்பதற்காக, கிறிஸ்மஸ், பக்ரீத், போன்றவற்றிற்கு, லாக் டவுன் குறித்து பேசாமல் மெளனமாக இருந்து விட்டு, ஹிந்துக்கள் கொண்டாடும் பொங்கல் பண்டிகையில் இருந்து 4 நாட்கள், தமிழக அரசு லாக் டவுன் போட்டு இருப்பதன் மூலம், இந்த அரசு ஹிந்துக்கள் மீது எந்த அளவிற்கு தனது வன்மத்தை காட்ட துவங்கியுள்ளதை அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் புரிந்துக் கொள்ள முடியும். அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டம் அயன்பேரையூர் கிராம மக்கள் விநாயகர் கோவிலை இடிக்க வேண்டாம் என்று கதறி அழுத காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.