மத்திய அரசின் “அனைவருக்கும் வீடு” திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட, வீட்டைத்தான் தமிழக முதல்வர் ஸ்டாலின் பள்ளி மாணவருக்கு வழங்கியுள்ளார் என்ற செய்தி தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில் கூடவா தி.மு.க அரசு ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நரிக்குறவர் இனத்தை சேர்ந்த பெண்மணி அஸ்வினியின் பெயரை, தமிழக மக்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. ஏன்னெனில், தி.மு.க-வின் ஆசிபெற்ற ஊடகங்கள், பத்திரிக்கையாளர்கள், நெறியாளர் மற்றும் யூ-டியூப் சேனல்கள் அதிக முக்கியத்துவம் அவருக்கு வழங்கி இருந்தது. அஸ்வினி கேட்டு கொண்டதற்கு இணங்க தமிழக அரசு சார்பில் அவருக்கு வீடு வழங்கப்பட்டது.
நரிக்குறவர் இனத்தை சேர்ந்த அஸ்வினுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உதவியது, முத்ரா கடன் மற்றும் சுவாநிதி திட்டத்தின் கீழ்தான், என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். தமிழக அரசு இதில் கூடவா ஸ்டிக்கர் ஒட்டும் என்று கடும் விமர்சனங்களும், கண்டனங்களும் அப்பொழுது எழுந்து இருந்தது. அந்த வகையில், வழக்கம் போல மீடியாக்களால் பிரபலப்படுத்தப்பட்டவர் பள்ளி மாணவன், அப்துல் கலாம். இவரை தான், தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்தார். அதனை அடுத்து, மாணவன் குடும்பம் கேட்டு கொண்டதற்கு இணங்க வீடு வழங்கப்பட்டது. ஆனால், அது மத்திய அரசின் “அனைவருக்கும் வீடு” திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட, வீட்டைத்தான் தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார் என்ற செய்தி தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மத்திய அரசின் திட்டத்தில் ஸ்டிக்கர் ஒட்டும் பணியை தவிர தமிழக அரசிற்கு வேறு வேலையில்லையா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

