ராமநாதபுர மாவட்டத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவது, பெற்றோர்களிடையே கடும் அச்சத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம், சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமடைந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தங்களது வேதனையை வெளிப்படுத்தி உள்ளனர். இது குறித்த செய்தியினை பிரபல பத்திரிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.
தி.மு.க ஆட்சி பொறுப்புக்கு வரும் முன்பு பிரியாணி கடை, சுண்டல் கடை, ஓசி தேங்காய் கடை, பியூட்டி பார்லர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஆட்சியில் அமர்ந்த பின்பு அம்மா உணவகம், அம்மா கிளினீக் மீது தாக்குதல். மேலும், திருச்சி மாவட்டம் நவல்பட்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சமீபத்தில், கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அந்த வகையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே செல்லும் அவலநிலை ஏற்பட்டு இருந்தது.
இது ஒருபுறம் இருக்க, தலைமை செயலகத்தில் பணியில் இருந்த காவலரை, அமைச்சர் ஒருவரின் கார் ஓட்டுனர் ஆபாசமாக திட்டியது. மேலும், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ எழிலரசன் அரசு உயர் அதிகாரிகளுக்கு, உரிய மரியாதை கொடுக்காமல் கீழ்த்தரமாக விமர்சனம் செய்தது, என அனைத்து தரப்பு மக்களும் வெறுக்கும் ஆட்சியாக, இந்த அரசு மாறி உள்ளது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இது தவிர, தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபுவின் கண்ட்ரோலில் இல்லை, என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சமீபத்தில் குற்றம்சாட்டி இருந்தார். இப்படி, நாளுக்கு நாள் சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சந்தி சிரித்து வரும் நிலையில், ராமநாதபுர மாவட்டத்தில் போன் செய்தால், வீட்டிற்கே வந்து கஞ்சா வழங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.