நீட் தேர்வின் அவசியம் குறித்து தமிழக ராணுவ வீரர் ஒருவர், முதல்வர் ஸ்டாலினுக்கு பிரபல திரைப்படம் ஒன்றினை சுட்டிக்காட்டி நீட் தேர்வின் அவசியத்தை விளக்கி பேசிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை சாத்தியப்படுத்தும் வகையில், கல்வியாளர்கள், சர்வதேச கல்வி நிபுணர்கள், என அனைவரின் ஆலோசனையை கேட்ட பின்பே மத்திய அரசு நீட் தேர்வை நடைமுறைக்கு கொண்டு வந்தது. இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களும், நீட் தேர்விற்கு வரவேற்புத் தெரிவித்துள்ளன. ஆனால், ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த தோழர்கள் நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து பொய்ப் பிரசாரங்களை தமிழக மக்களிடம் பரப்பி வருகின்றனர்.
அந்த வகையில், நீட் தேர்விற்கு எதிராக 12 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதி அவர்களின் ஆதரவினை கோரி இருந்தார் ஸ்டாலின். ஆனால் இன்று வரை எந்தவொரு மாநில முதல்வரும் தி.மு.க-விற்கு ஆதரவு வழங்கவில்லை என்பதே நிதர்சனம். இந்த நிலையில் தான், தமிழக ராணுவ வீரர் ஒருவர் நீட் தேர்வின் அவசியத்தை முதல்வர் ஸ்டாலினுக்கு பாட்ஷா திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியை சுட்டிக்காட்டி பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.