ஆர்.எஸ். பாரதி நோட்டீஸ் அண்ணாமலை மரண பதிலடி!

ஆர்.எஸ். பாரதி நோட்டீஸ் அண்ணாமலை மரண பதிலடி!

Share it if you like it

தமிழக பா.ஜ.க தலைவருக்கு தி.மு.க. எம்பி வழக்கறிஞர் நோட்டிஸ் அனுப்பியுள்ளார். இதற்கு அண்ணாமலை சிறப்பான பதிலை வழங்கியுள்ளார்.

தி.மு.க. தலைமையிலான தமிழக அரசின் 2022 – 2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கடந்த 18-ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்தார். இது தான், திராவிட மாடல் பட்ஜெட் என கழக கண்மணிகள், அதன் கூட்டணிக் கட்சியை சேர்ந்த தலைவர்கள் மற்றும் அடிமை ஊடகங்கள், கொத்தடிமை போராளிகள் ஒத்து ஊதி வந்தனர். ஆனால், உண்மையில் இந்த பட்ஜெட்டில் உருப்படியான எந்த அம்சமும் இல்லை என்பதுதான் பலரின் குற்றச்சாட்டு.

அந்த வகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் 4 நாட்கள் பயணமாக தனது குடும்பத்துடன் துபாய் சென்று உள்ளார். தமிழகத்திற்கு தேவையான முதலீடுகளை கொண்டு வருவதற்காக, அவர் சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான், பிரபல வார பத்திரிக்கையான ஜீனியர் விகடன். துபாய்க்குச் சென்ற 5,000 கோடி அமைச்சர்களை கண்காணிக்கும் ராஜ்பவன் என்று செய்தி வெளியிட்டு இருந்தது. இச்செய்தி, தமிழக மக்களிடையே தற்பொழுது பேசுபொருளாக மாற்றியுள்ளது.

இந்த நிலையில், ஆளும் கட்சியை கண்டித்து தமிழக பா.ஜ.க தலைவர் தலைமையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்பொழுது, பத்திரிக்கையில் வந்த செய்தியை மேற்கோள் காட்டி 5,000 கோடி ரூபாய் மர்மம் குறித்து அண்ணாமலை கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு, தி.மு.க மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான, ஆர்.எஸ்.பாரதி தமிழக பா.ஜ.க தலைவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டதாவது; முதல்வரின் துபாய் பயணத்தை விமர்சிப்பதா? அண்ணாமலை உடனே மன்னிப்பு கோர வேண்டும். இல்லாவிடில் 100 கோடி ரூபாய் மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கு, அண்ணாமலை அளித்த பதில் இதோ;

100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு தி.மு.க கட்சி, என் மீது, மானநஷ்ட வழக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதை அறிந்தேன். தி.மு.க.வின் முதன்மை குடும்பம், சாதாரண சாமானியனான என்னையும், அவர்களைப் போன்ற துபாய் குடும்பத்துக்கு, சரிசமமாக நடத்துகிறது. நம் நாட்டின் நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. திமுகவின் அச்சுறுத்தல்களை எல்லாம் நீதிமன்றத்தில் சந்திப்பேன். தமிழகத்துக்கான, என் போராட்டம் தொடரும்… துணிவுடன். மக்கள் துணையுடன்..

Image
Image

Share it if you like it