மத்திய அரசு மற்றும் சமூக அக்கறையோடு உதவி செய்யும் நல திட்டங்களில் கூட ஸ்டிக்கர் ஒட்டும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டு வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலவி வருகிறது. அந்த வகையில், ஆளும் கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டும் காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழக மக்களுக்கு நல்லாட்சியை தருவோம் என்று தேர்தல் சமயத்தில் வாக்குறுதி கொடுத்தது தி.மு.க அரசு. ஆனால், இன்று வரை தமிழகத்தில் என்ன? நிகழ்ந்து வருகிறது என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் நன்கு அறிவர். கொரோனா தொற்று தமிழகத்தில் தீவிரமாக பரவிய சமயத்தில், ஏழை, எளியவர்களை நேரில் சென்று சந்தித்து பல்வேறு உதவிகளை, ஆர்.எஸ்.எஸ், சேவா பாரதி மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் செய்தது. ஆனால், ஆளும் கட்சியை சேர்ந்த கழக கண்மணிகள், அதிலும் ஸ்டிக்கர் ஒட்டிய சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த வகையில், தினந்தோறும் 2,000 ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு தலா 50 லிட்டர் வீதம் எரிபொருள் வழங்க ரிலையன்ஸ் நிறுவனம் முன்வந்தது. அதிலும் ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் தேடியது தி.மு.க அரசு.
அதே போல, பள்ளி மாணவன் அப்துல் கலாம் என்பவர். மனித நேயம் குறித்து பேசியதற்காக, முதல்வர் ஸ்டாலின் அம்மாணவனை நேரில் அழைத்து பாராட்டி, தமிழக அரசு சார்பில் வீடு வழங்கி இருந்தார். மத்திய அரசின் திட்டமான அனைவருக்கும், வீடு” திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டைத்தான் முதல்வர் தனது பெயரில் வழங்கி இருந்தார். இப்படி, மத்திய அரசின் திட்டத்திலும், சமூக ஆர்வலர்கள் செய்யும் உதவியிலும் ஸ்டிக்கர் ஒட்டியே காலத்தை கடத்துவதாக தி.மு.க அரசு மீது குற்றச்சாட்டு குவிந்து வருகிறது. இந்த நிலையில் தான், ஆளும் கட்சியின் ஸ்டிக்கர் ஒட்டும் செயல்களை சுட்டிக்காட்டும் காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



