கோயம்புத்தூரில் பகவான் கிருஷ்ணர் சிலை உடைப்பு.
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி அமைந்த நாளில் இருந்தே, ஹிந்து கோவில்கள் இடிக்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுக்களை அம்மாநிலத்தை சேர்ந்த ஹிந்துக்கள் தெரிவித்து வருவதை ஊடகங்கள், பத்திரிக்கைகள், வாயிலாக எளிதில் அறிந்து கொள்ள முடியும்.
தமிழகத்தில் தி.மு. க ஆட்சியை பிடித்த நாளில் இருந்தே ஆந்திரா-வை போன்றே தொடர்ந்து ஹிந்து ஆலயங்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை, ஹிந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்த பின்பும் கூட கோவில் இடிப்பு பணிகள் என ஹிந்து விரோத அரசாக விடியல் அரசு மாறியுள்ளது என்று பலர் தங்களது கோவத்தையும், வேதனையையும், தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கோயம்புத்தூர் பாரதி நகரில் பகவான் கிருஷ்ணர் சிலை ஒன்று உடைக்கப்பட்டுள்ள சம்பவம் ஹிந்து மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு இளம் தொழிலதிபர், அரசியல் விமர்சகர், என்னும் பன்முகத்தன்மை கொண்ட அருண் அவர்கள் தனது கடும் எதிர்ப்பினை தெரிவித்து உள்ளார்.
அருண் டுவிட்டர் பதிவு.
தமிழகம்: கோவை பாரதி நகரில் பகவான் கிருஷ்ணர் சிலை உடைக்கப்பட்டது.
தமிழகத்தில் ஸ்டாலின் வெற்றி பெற்றால், ஆந்திராவுக்கு ஏற்பட்ட நிலைமையை இந்துக்கள் சந்திக்க நேரிடும் என்று நான் நீண்ட நாட்களுக்கு முன்பே சொன்னேன். இது அவர்களின் தவறு மட்டுமல்ல, அவர்களுக்கு வாக்களிக்கும் இந்துக்களின் முழு முட்டாள்தனம் என்று குறிப்பிட்டு உள்ளார்.