தி.மு.க.விடம் மண்டியிட்டுக் கிடக்கும் காங்.!

தி.மு.க.விடம் மண்டியிட்டுக் கிடக்கும் காங்.!

Share it if you like it

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பாரத நாட்டின் முன்னாள் பிரதமருமான ராஜிவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளி பேரறிவாளன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டிருப்பது குறித்து இதுவரை எந்தக் கருத்தை தெரிவிக்காமல் அக்கட்சித் தலைமை மெளனம் காத்து வருவதுதான் புரியாத புதிராக இருக்கிறது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராஜிவ் காந்தி. இந்தியாவின் 6-வது பிரதமராக இருந்த இவர், 1991 மே 21-ம் தேதி தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரசாரத்திற்கு வந்தபோது, இலங்கையைச் சேர்ந்த விடுதலை புலிகள் அமைப்பினர் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தார். இத்தாக்குதலில், அவரது பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் என 14 பேர் உடல் சிதறி பலியாகினர். இக்கொடூரக் கொலை உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இக்கொலைக்கு தி.மு.க.தான் காரணம் என்று சொல்லப்பட்டது. இதனால், அப்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. படுதோல்வியைச் சந்தித்தது.

இது ஒருபுறம் இருக்க, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவர்தான் பேரறிவாளன். இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், தமிழகத்தில் தி.மு.க. எப்பொழுதெல்லாம் ஆட்சியைப் பிடிக்கிறதோ. அப்பொழுதெல்லாம் பேரறிவாளனுக்கு தொடர்ந்து சலுகைகள் வழங்கப்பட்டு வந்தன. மேலும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பேரறிவாளன் உட்பட ராஜிவ் காந்தி கொலைக்குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்து வந்தன. அதோடு, ராஜிவ் கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கவர்னருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்தது.

அதேசமயம், தி.மு.க. தரப்பில் 7 பேர் விடுதலை தொடர்பாக கோர்ட்டிலும் வழக்குத் தொடுக்கப்பட்டது. குறிப்பாக, பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசுத் தரப்பில் ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிடப்பட்டது. எனினும், இதை நிராகரித்த சுப்ரீம் கோர்ட் குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கியது. இதை தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கொண்டாடி வருகின்றன. அதேசமயம், தி.மு.க. கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், தங்களது கட்சியின் முன்னாள் தலைவரை கொலை செய்ய பேரறிவாளன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டிருப்பது குறித்து இன்றுவரை வாய் திறக்காமல் மெளனம் காத்து வருகிறது. இதனால், தமிழகத்தில் தனது கட்சியை காப்பாற்றிக் கொள்ள தி.மு.க.விடம் காங்கிரஸ் மண்டியிட்டுக் கிடக்கிறது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it