தேசத்துக்கு எதிராக பேசினால் பதவி, விருதா? தி.மு.க. அரசுக்கு எதிராக கண்டனக்குரல்!

தேசத்துக்கு எதிராக பேசினால் பதவி, விருதா? தி.மு.க. அரசுக்கு எதிராக கண்டனக்குரல்!

Share it if you like it

தேசத்திற்கு விரோதமாக பேசும் நபர்களை தேடிப்பிடித்து விருதுகளையும், பதவிகளையும் வழங்கும் தி.மு.க. தலைமையிலான தமிழக அரசுக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

இந்து மதத்திற்கு விரோதமாகவும், தேசத்திற்கு விரோதமாகவும் செயல்படுவதை சிலர் கொள்கையாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில், தேசத்திற்கு விரோதமாக பேசிவருபவரும், பெண்களின் இடுப்பு குறித்து ஆய்வு செய்தவருமான பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் ஐ.லியோனிக்கு தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவர் பதவியை வழங்கி இருக்கிறது தி.மு.க.. அரசு. அதேபோல, மாவோயிஸ்ட்களின் அனுதாபி என்று குற்றம்சாட்டப்படும் ஆரோக்கியராஜ் மரியசூசை என்பவருக்கு டி.என்.பி.எஸ்.சி.யில் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், ஹிந்துக்களை மட்டுமே குறிவைத்து தாக்கி பேசி வருபவரும், கள்ளக் காதலுக்கு புது விளக்கம் கொடுத்தவருமான சுப.வீரபாண்டியனுக்கு தமிழ்நாடு பாடத்திட்ட நிறுவன அறிவுரைக் குழு உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது.

தவிர, பா.ஜ.க., மத்திய அரசு மற்றும் பாரத பிரதமர் மோடியை குறிவைத்து தொடர்ந்து கீழ்த்தரமாக விமர்சனம் செய்து வரும் நாஞ்சில் சம்பத்திற்கு அண்ணா விருதும், சமூக ஆர்வலர் என்னும் போர்வையில் ஆபாசமாக பேசி வரும் சூர்யா சேவியருக்கு சொல்லின் செல்வர் விருதையும் வழங்கி இருக்கிறது தமிழக அரசு. இப்படிதேசத்திற்கு விரோதமாகவும், தி.மு.க.விற்கு ஆதரவாகவும் பேசி வரும் நபர்களை தேடிப்பிடித்து தமிழக அரசு விருதுகளையும், உயர் பதவிகளையும் வழங்கி வருவது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, தமிழக அரசுக்கு எதிராக குரல் கொடுக்கத் தயாராகி வருகிறார்கள் பொதுமக்கள்.

கள்ள உறவுக்கு புது விளக்கம் கொடுத்தவர்.

சொல்லின் செல்வர்’ விருது

திண்டுக்கல் ஐ லியோனி”
ராஜ் மரியா சூசை

Share it if you like it