நரிக்குறவர் இன மக்களின் மேம்பாட்டிற்காக, கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மாநிலங்களவையில் ஜி.கே. வாசன் குரல் கொடுத்திருந்தார். இந்நிலையில், நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
நரிக்குறவர் இனத்தை சேர்ந்த பெண்மணி அஸ்வினியின் பெயரை, தமிழக மக்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. ஏன்னெனில், தி.மு.க-வின் ஆசிபெற்ற ஊடகங்கள், பத்திரிக்கையாளர்கள், நெறியாளர் மற்றும் யூ-டியூப் சேனல்கள் அதிக முக்கியத்துவத்தை அவருக்கு வழங்கி இருந்தது. அந்த வகையில், அஸ்வினி கேட்டு கொண்டதற்கு, இணங்க தமிழக அரசு சார்பில் அவருக்கு வீடு வழங்கப்பட்டது.
சகோதரி அஸ்வினிக்கு, முத்ரா கடன் மற்றும் சுவாநிதி திட்டத்தின் கீழ், உதவிய தமிழக அரசுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். அதன் பின்பே, மத்திய அரசின் திட்டத்திலும், தி.மு.க அரசு ஸ்டிக்கர் ஒட்ட முயன்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அந்த வகையில், வழக்கம் போல மீடியாக்களால் பிரபலப்படுத்தப்பட்டவர் மாணவன் அப்துல் கலாம். இவரை தமிழக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் நேரில் சந்தித்தார். மாணவன் குடும்பம் கேட்டு கொண்டதற்கு, இணங்க அவருக்கும் வீடு வழங்கப்பட்டது. ஆனால், அது மத்திய அரசின் “அனைவருக்கும் வீடு” திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட, வீட்டைத்தான் முதல்வர் வழங்கி இருந்தார் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
அந்த வகையில், 2022 – 2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் எதுவும் இடம்பெறவில்லை, என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி இருந்தன. மேலும், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இது பகல் கனவு பட்ஜெட் என கடுமையாக சாடி இருந்தார். அதனை தொடர்ந்து, ஜல் ஜீவன், கல்வி துறை, கிராமப்புற சாலை மேம்பாடு, சுய உதவிக்குழுவிற்கான நிதி, பள்ளிகளில் மதிய உணவு, குழந்தைகள் நலன், இவை அனைத்தும் மத்திய அரசின் திட்டம். எனவே, இந்த திட்டத்துக்கு நிதி உயர்வு என்று தி.மு.க அரசு சொல்லும், அதனை நம்பாதீங்க எல்லாமே மத்திய அரசு நிதி, இது ஒரு ஸ்டிக்கர் பட்ஜெட் என்று பிரபல அரசியல் விமர்சகர் செல்வகுமார் விமர்சனம் செய்து இருந்தார்.
அதனை தொடர்ந்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், நரிக்குறவ மக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து மாநிலங்களவையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு குரல் கொடுத்திருந்தார். இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள நரிக்குறவர் குருவிக்காரர் சமூகத்தினரை, பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட விரைவான நடவடிக்கை, எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.