நெல்லை என்றாலே எனக்கு நெல்லையப்பர் கோவில்தான் நினைவுக்கு வரும் என்று உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தின்போது ஸ்டாலின் கூறியிருப்பதால், கோவில்கள் மீது ஸ்டாலினுக்கு என்ன திடீர் கரிசனம் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தி.மு.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரித்து வருவது ஒருபுறம் என்றால், மறுபுறம் ஹிந்து ஆலயங்களை இடிக்கும் காணொளிகள் சமூக வலைத்தளங்கள் மற்றும் காட்சி ஊடகங்கள் வாயிலாக வெளிவந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, கோயம்புத்தூர் பாரதி நகரில், பகவான் கிருஷ்ணர் சிலை ஒன்று, சமீபத்தில் உடைக்கப்பட்ட சம்பவம், ஹிந்துக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து, தாம்பரம் பகுதியில் ராமர் கோவில் ஒன்று இடிக்கப்பட்டது. இப்படி, தமிழகத்தில் தொடர்ந்து கோவில்கள் இடிக்கப்படுவது ஹிந்துக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும், கோவத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம், மத மாற்றும் சக்திகள் ஆளும் கட்சியின் ஆசியுடன், அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்படாமல் மசூதிகளையும், சர்ச்களையும் தமிழகம் முழுவதும் கட்டி வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலவி வருகின்றன. இது ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் தேர்தல் வரும் காலங்களில் எல்லாம் துர்கா ஸ்டாலின் கோவில் கோவிலாகச் செல்வது போன்றும், புனித யாத்திரை மற்றும் கிரிவலம் வருவது போன்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகும். இப்படி ஹிந்துக்களின் ஓட்டு வங்கியை குறிவைத்து தி.மு.க. நடத்தும் திட்டமிட்ட கபட நாடகம் இது என்பது அனைவரின் கருத்தாக இருக்கும். அந்த வகையில், உள்ளாட்சித் தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதற்காக நெல்லை கோவில் பற்றி பெருமையாக பேசியிருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். இதைத்தான் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.