நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் முருகன் தனது வாக்கினை பதிவு செய்வதற்கு முன்பே அவரின் வாக்கினை கள்ள தனமாக பதிவு செய்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆளும் கட்சியின் தோல்வியை மறைக்க நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று சட்டத்திற்கு புறம்பாக ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் அப்பாவி ஏழை, எளிய மக்களின் இயலாமையை பயன்படுத்தி பணம், பரிசு பொருட்கள், கொலூசு என சட்டமன்ற தேர்தல் போல பணத்தை தண்ணீர் போல செலவு செய்து எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என கங்கணம் கட்டி கொண்டு செயல்பட்டு வருவதை தமிழக மக்கள் நன்கு அறிவர்.
அதிகார பலம், பணம் பலம், என ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் வாக்கு சாவடிகளை கைப்பற்றி ஜனநாயக படுகொலை செய்து வரும் நிலையில். மத்திய மீன்வளத்துறை அமைச்சர் முருகனின் வாக்கினை வேறு ஒருவர் கள்ள தனமாக பதிவு செய்து இருப்பதன் மூலம் தி.மு.க ஆட்சியின் அராஜக செயல் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.